பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

JPEG

255

jump instruction



தகவல் தொடர்பு பிணையத்தில் நடைபெறும் செய்திப் பரிமாற்றங்களைக் குறித்து வைத்துக் கொள்ள இக்குறிப்பேடு பயன்படும். ஒரு தரவுத் தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள விவரங்களை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளைக் குறித்து வைத்துக் கொள்ள முடியும். ஒரு கணினி அமைப்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்புகளின் விவரங்கள், அவ்வப்போது நீக்கப்பட்ட கோப்புகளின் விவரங்கள் இவற்றையும் கண்காணித்துக் குறித்துக் கொள்ளலாம். சேமித்து வைக்கப்பட்ட தகவல்களுக்கு இழப்பு அல்லது பழுது ஏற்படுமாயின், இதற்குமுன் நடந்த நிகழ்ச்சிகளைப் பரிசீலித்து மூலத் தகவல்களை மீட்டுருவாக்கம் செய்ய, பொதுவாக இக்குறிப்பேடு பயன்படுகிறது.

JPEG : ஜேபெக் : 1. ஒளிப்பட வல்லுநர்களின் கூட்டுக் குழு என்று பொருள்படும் Joint Photographic Experts Group என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வரிசையற்ற கொசைன் மாற்றுகையைப் (Descrete Cosine Transform) பயன்படுத்தி படிமங்களை (images) இறுக்கிய வடிவத்தில் சேமிப்பதற்கான ஐஎஸ்ஓ/ஐடியூ தர வரையறை. 100:1 விகித அளவுக்கு இறுக்கிச் சுருக்க முடியும். ஆனால் தகவல் துல்லிய இழப்பு இருக்கவே செய்யும். 20:1 அளவில் சுருக்கினால் ஒரளவு தகவல் இழப்பு வெளிப்படையாகத் தெரியாத அளவுக்கு இருக்கும். 2. ஒரு வரைகலைப் படம் ஜேபெக் வடிவாக்கத்தில் ஒரு கோப்பாக சேமிக்கப்படும் முறை.

Jughead : ஜூஹெட் : ஜான்ஸியின் உலகளாவிய கோஃபர் படிநிலை அகழ்வாய்வும் திரைக்காட்சியும் என்று பொருள்படும் Jonzy's Universal Gopher Hierarchy Excavation and Display என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு சொல்லைத் தந்து தேடும் முறையில் கோஃபர் வெளியிலுள்ள கோப்பகங்களைத் தேடிக் கண்டறியப் பயனாளருக்கு உதவும் இணைய சேவை. மேல்நிலை கோஃபர் பட்டி (menu) களில் உள்ள கோப்பகத் தலைப்புகளில் காணும் முக்கிய சொற்களை ஒரு ஜூஹெட் வழங்கன் கணினி அகர வரிசைப்படுத்தி வைக்கிறது. ஆனால் அது கோப்பகங்களிலுள்ள கோப்புகளை அகர வரிசைப் படுத்துவதில்லை.

julian calendar : ஜூலியன் நாள்காட்டி : கி.மு. 46 ஆம் ஆண்டு ஜூலியஸ் சீசரால் அறிமுகப்படுத் தப்பட்ட நாள்காட்டி. சந்திரனை அடிப்படையாகக் கொண்ட முந்தைய காலண்டருக்குப் பதிலாக இது புகுத்தப்பட்டது. ஜூலியன் நாட்காட்டி முறையில் சராசரியாக ஆண்டுக்கு 365 நாட்கள். ஒவ்வொரு நான்காண்டிலும் ஒரு லீப் ஆண்டு. ஆக, ஆண்டுக்கு 365.25 நாட்கள். ஆனால், உண்மையில் சூரிய ஆண்டு என்பது சற்றே குறைவான நாட்களைக் கொண்டது. இதன் காரணமாகவே ஜூலியன் நாட்காட்டி முறை வழக்கொழிந்தது. மிகத்துல்லிய கிரிகோரியன் நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. இதனை போப் கிரிகோரி XIII அறிமுகப் படுத்தினார்.

jump, conditional : நிபந்தனை தாவல்.

jump instruction : தாவு ஆணை.