பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/261

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
keyword-in-context
knowbot
259

பட்ட சொல்; கட்டளைச் சொல் : தரவுத் தளங்களில் ஏடுகளிடையே வரிசையாக்கம் அல்லது தேடல் செயல்பாடுகளை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் சொல் அல்லது சொல்தொடர் அல்லது குறிமுறை. இது, தரவுத் தள அட்டவணையின் திறவுப் புலத்தில் (key field) இடம் பெற்றுள்ளதாயிருக்கும்.

keyword-in-context : சூழலில்-திறவுச்சொல் : ஒரு தானியங்கு தேடல் வழிமுறை. ஆவண உரை அல்லது தலைப்புகளை அடையாளங்காட்டுவதற்கான சுட்டுக் குறிப்புகளை உருவாக்கிக் கொள்ளும். ஒவ்வொரு திறவுச் சொல்லும் அதைச் சுற்றிய உரைப்பகுதியுடன் சுட்டுக் குறிப்பில் பதிவு செய்யப்படும். பெரும்பாலும் ஆவண உரை அல்லது தலைப்புகளில் திறவுச் சொல்லுக்கு முந்தைய அல்லது பிந்தைய சொல் அல்லது சொல் தொடராக இருப்பதுண்டு.

keyword search : திறவுச்சொல் தேடு.

.kh : .கேஹெச் : ஒர் இணைய தள முகவரி கம்போடியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

.ki : .கேஐ : ஒர் இணையதள முகவரி கிரிபேட்டி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

kil : நிறுத்து; முறி; கொல் : 1. ஒரு நிரல் அல்லது இயக்க முறைமையின் ஒரு செயல்பாட்டை இடையிலேயே நிறுத்துதல் அல்லது முறித்தல். 2. கோப்பு மேலாண்மையில் ஒரு கோப்பினை அழித்தல். பெரும்பாலும் அதனை மீட்கும் நம்பிக்கை இல்லமல்.

killer app : அதிரடிப் பயன்பாடு : ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துகின்ற செல்வாக்கான மென்பொருள். இந்த மென்பொருள் விற்பனையில் ஒரு சாதனையை நிகழ்த்தும். அதுமட்டுமின்றி இதன் விற்பனை காரணமாய் இது செயல்படும் இயக்க முறைமை அல்லது இது செயல்படும் வன்பொருளின் விற்பனையும் அதிகரிக்கும்.

kilobits per second : ஒரு வினாடியில் கிலோ பிட்டுகள் : சுருக்கமாக கேபிபீஎஸ் (kbps) என்று குறிக்கப் படுகிறது. ஒரு பிணையத்தில் தகவல் பரிமாற்றத்தின் வேகத்தை அளக்கப் பயன்படுத்தப்படும் அளவீடு. ஒரு வினாடியில் 1024 துண்மி (பிட்) என்ற வேகத்தின் மடங்காக அளவிடப் படுகிறது.

kinesis ergonomic keyboard : கினிசிஸ் சூழலியல் விசைப்பலகை : தொடர்ந்து விசைப்பலகையில் பணியாற்றுவதால் சோர்வும் உலைவும் ஏற்படுத்தாத பணிச்சூழலுக்குகந்த விசைப்பலகை வடிவமைப்பு.

kinetics : இயக்கியல்.

kiosk : கணினி முனையம் : பொது மக்களுக்குத் தேவையான தகவல்களை பல்லூடகத் திரைக்காட்சி மூலம் தெரிவிக்கும் கணினி மையம்.

kiosk mode : கணினியகப் பாங்கு..

knowbot : நோபாட்; அறிந்திரன் : அறிவு + எந்திரன் (Knowledge+Robot) என்பதன் சுருக்கம். இது ஒரு செயற்கை நுண்ணறிவு நிரல். முன் வரையறுக்கப்பட்ட சில விதிமுறைகளின் அடிப்படையில் இந்த நிரல் செயல்படுகிறது. இணையம் போன்ற ஒரு மாபெரும் பிணையத்தில் ஒரு குறிப்பிட்ட கோப்பினைத் தேடுதல் அல்லது குறிப்பிட்ட தகவலைக் கொண்டுள்ள ஒர்