பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

keyboard to

258

keyword



keyboard to - disk system: விசைப்பலகையிலிருந்து - வட்டு முறைமைக்கு

keyboard to - tape system : விசைப்பலகையிலிருந்து - நாடா முறைமைக்கு.

key code : விசைக் குறியெண் : கணினி விசைப்பலகையில் ஒரு குறிப்பிட்ட விசைக்கு ஒதுக்கப்பட்டுள்ள தனித்த குறியெண். இந்த எண்ணைக் கொண்டுதான் எந்த விசை அழுத்தப்பட்டுள்ளது என்பதைக் கணினி அறிந்துகொள்கிறது. ஒரு விசையுடன் மாறாத பிணைப்புக் கொண்டது இந்தக் குறியெண் மட்டுமே. விசையை அழுத்துவதன் விளைவாய்ப் பெறப்படும் எழுத்து, எண், குறிமானம், சிறப்புக் குறிகள் எதுவாயிருப்பினும் அது விசையுடன் நேரடித் தொடர்பு கொண்டதன்று. அது நாமாக நிரல் மூலம் தொடர்புபடுத்திக் கொள்வதாகும்.

key disk : மென்பூட்டு/திறவு வட்டு.

key escrow : கீ எஸ்கிரோ : ஒரு மறையாக்க முறை. அரசு முகமையினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தனித் திறவி (Private key) மூன்றாம் நபர்களுக்கு வழங்கப்படும். அத் திறவி மூலம் மறையாக்கம் செய்யப்பட்டு அனுப்பப்படும் செய்திகளை அரசு விரும்பினால் படித்துக் கொள்ள முடியும்.

key-frame : முதன்மைச் சட்டம் : ஒர் அசைவூட்ட நுட்பம். ஒரு பொருளின் தொடக்க நிலை மற்றும் இறுதி நிலைப்பாட்டைக் குறிப்பிட்டுவிட்டால் இடைப்பட்ட சட்டங்கள் அனைத்தையும் கணினியே தீர்மானித்து மிக நளினமான தானியங்கு அசைவூட்டப்படத்தை உருவாக்கித்தரும். இந்த நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் பெரும்பாலான கதிர்-வரைவு கணினி அசைவூட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

keying - error rate : விசை அழுத்தல் தவறு விகிதம்.

key recovery : திறவி மீட்சி : ஒரு தனித் திறவி (private key) வழிமுறை. அரசு முகமை போன்று அதிகாரம் பெற்ற ஒருவர் தனிச்சிறப்பான மென்பொருளைப் பயன்படுத்தி மறையாக்கம் செய்யப்பட்ட தகவலிலிருந்து திறவியை பிரித்தெடுக்க முடியும். அமெரிக்காவில் தற்போதுள்ள சட்டப்படி 1998-க்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எந்தவொரு மறையாக்க மென்பொருளும் திறவி மீட்சி வசதியைப் பெற்றிருக்க வேண்டும்.

key, shift : நகர்த்து விசை.

keystroke : விசையழுத்தம் : ஒரு குறிப்பிட்ட எழுத்தை உள்ளீடு செய்யவோ அல்லது ஒரு கட்டளையை நிறைவேற்றும் பொருட்டோ விசைப்பலகையிலுள்ள ஒரு விசையை அழுத்தும் நடவடிக்கை. சில பயன்பாட்டு மென்பொருள்களின் செயல் திறனும் எளிமையும் அதிலுள்ள பொதுவான செயல்பாடுகளை மேற்கொள்ள எத்தனை விசையழுத்தங்கள் தேவைப்படுகின்றன என்பதைக் கொண்டு அளக்கப்படுகின்றன.

key stroke buffer : விசை அழுத்தல் இடையகம்.

key, user difined function : பயனாளர் வரையறுக்கும் பணிவிசை,

key verifier : விசை சோதிப்பி; விசைச் சரிபார்ப்பி.

keyword : முக்கியச் சொல்; சிறப்புச் சொல்; திறவுச் சொல்; நிர்ணயிக்கப்