பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.L1

252

landscape monitor


L

L1 cache:எல்1 கேஷ்: நிலை 1 இடைமாற்றகம்: இன்டெல் 486 மற்றும் அதைவிட மேம்பட்ட செயலிகளில் உள்ளமைக்கப்பட்டுள்ள இடைமாற்று நினைவகம். நிலை 1 இடைமாற்றகம் பொதுவாக 8கேபி கொள்திறனுள்ளது. ஒற்றைக் கடிகாரச் சுழற்சியில் படித்துவிட முடியும். எனவே தொடக்க காலங்களில் இது பரிசோதிக்கப்பட்டது. இன்டெல் ஐ1486 ஒரேயொரு நிலை 1 இடைமாற்றகம் கொண்டது.பென்டியம் செயலியில் இரண்டு உண்டு. ஒன்று ஆணைகளுக்கு, மற்றொன்று தரவுகளுக்கு.

L2 cache:எல்2 கேஷ்;நிலை2 இடைமாற்றகம்:ஐ1486 மற்றும் அதனிலும் மேம்பட்ட செயலிகள் பயன்படுத்திக் கொள்ளும் இடைமாற்று நினைவகம்.இது செயலிக்கு அருகில் தாய்ப்பலகையில் பொருத்தப்பட்டுள்ள நிலை ரோம் (static RAM) ஆகும்.நிலை 2 இடைமாற்றகம் பொதுவாக 128 கேபி முதல் 1 எம்பி வரை இருக்கலாம்.முதன்மை நினைவகத்தைவிட வேகமானது.ஆனால்,செயலிக்குள்ளே உள்ளமைந்துள்ளநிலை 1 இடைமாற்று நினைவகத்தைவிட மெதுவானது.

Ꮮ8Ꮢ:எல்8ஆர்:பிறகு என்று பொருள்படும் Later என்ற சொல்லை செல்லமாய்ச் சுருக்கமாகக் குறிப்பிடல்,சியூஎல்8ஆர் (See you Later) என்பதைப் போன்றது.மின் அஞ்சல்,யூஸ்நெட் செய்திக் குழுக்களில் தற்காலிகமாக விடைபெறும் போது பயன்படுத்தப்படுவது.

.la:.எல்.ஏ:ஓர் இணையதள முகவரி லாவோஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

lab hours:ஆய்வு நேரம்.

lable,header:தலைப்புச்சிட்டை.

lable identifier:சிட்டை அடையாளம் காட்டி.

lable,trailer:முன்னோட்டச்சிட்டை.

lands:சமதளங்கள்:குறுவட்டுகளில் 1 எனும் பிட்டைக் குறிக்கும்.குழி(pit) 0-வை குறிக்கும்.

landscape:அகண்மை.

landscape mode:பரப்புத்தோற்றப் பாங்கு: அகண்மைப் பாங்கு: ஓர் உரைப்பகுதி அல்லது ஒரு படிமம் உயரத்தைவிட அகலம் அதிகம் இருப்பின் அச்சுப்பொறியில் கிடைமட்டமாக அகலவாக்கில் அச்சிடலாம்.நீள்மைப் பாங்கு Portrait எனப்படும்.

landscape format:அகண்மை வடிவமைப்பு: பரப்புத்தோற்ற உருவமைவு.

landscape monitor:அகண்மைத் திரையகம்; பரப்புத்தோற்றக் காட்சித்திரை:உயரத்தைவிட அகலம் அதிகம் இருக்கும் கணினித் திரையகம். இதுபோன்ற திரை உயரத்தைக் காட்டிலும் அகலம் 33 சதவீதம் அதிகம் இருக்கும்.ஒரு தொலைக்காட்சித் திரையின் நீள அகல வீதங்களை ஒத்திருக்கும்.