பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

landscape printing

262

LaTex or LATEX


landscape printing:அகலவாக்கில் அச்சிடுதல்.

lansel mail bag:கையளவு மின்அஞ்சல் கருவி.

language and script:மொழியும் வரிவடிவும்.

language,assembly:தொகுப்புமொழி; சில்லுமொழி;சிப்புமொழி.

language, basic:அடிப்படை மொழி.

language checker:மொழி சரிபார்ப்பி; மொழி திருத்தி.

Language,Common Business Oriented: பொதுத் தொழில் சார்ந்த மொழி.COBOL மொழியின் விரிவாக்கப் பெயர்.

language,high level:உயர்நிலை மொழி.

language independent platform:மொழிசாராப் பணித்தளம்.

language,low level:அடிநிலை மொழி.

language,machine:பொறி மொழி.

language,object:இலக்கு மொழி.

language,query:வினவு மொழி.

language,source:ஆதார மொழி;மூலமொழி.

language tools:மொழியாளும் கருவிகள்

'laptop computer:மடிக்கணினி.

last in first out:கடைபுகு முதல் விடு: ஓர் அடுக்கில் (stack) உள்ள உறுப்புகளைக் கையாளும் வழிமுறை.ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கி வைக்கும் பொருள்களில்(சாப்பாட்டுத் தட்டுகள்)கடைசியாக வைக்கப்பட்ட பொருளைத்தான் முதலில் எடுப்போம்.ஒரு சாரையில்(queue) இருக்கும் உறுப்புகளைக் கையாளும் முறைக்கு (first in first out) மாறானது.

last modified:இறுதியாகத் திருத்தப்பட்டது.

latest:அண்மை.

large icons:பெரிய சின்னங்கள்.

large model:பெரிய மாதிரியம்: இன்டெல் 80x86 செயலிக் குடும்பத்தில் பயன்படுத்தப்படும் நினைவக மாதிரியம். இந்த மாதிரியத்தில் ஆணைகள் மற்றும் தகவல்கள் இரண்டுமே 64 கிலோபைட்டு களைவிட அதிகமாக இருக்கலாம். ஆனால் இரண்டும் சேர்த்து 1 மெகா பைட்டுகளைவிடக் குறைவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தகவல் கட்டமைப்பும் 64 கிலோ பைட்டுகளைவிடக் குறைவாகவே இருக்க வேண்டும்.

largest main frame computing capacity: உயர்ஆற்றல் பெருமுகக் கணினித்திறன்.

laser font:லேசர் எழுத்துரு;

laser disk:ஒளிவட்டு,லேசர் வட்டு.

laser print:ஒளி அச்சு.

LaTex or LATEX:லேடெக்ஸ்: லெஸ்லி லேம்போர்ட் (Leslie Lamport)நிறுவனம் (TeX) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைத்த ஓர் ஆவண உருவாக்க மென்பொருள். உரைப்பகுதியின் தலைப்பு,உள்ளடக்கம் போன்று உரை உறுப்புகளுக்குரிய மிக எளிய கட்டளைகள் மூலம் ஆவணத்தின் தோற்றத்தைக் காட்டிலும் ஆவண உள்ளடக்கத்தை முன்னிலைப்படுத்த லேட்டெக்ஸ் உதவுகிறது.