பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

microphone

288

MIDI



ஒர் உறுப்பின் திருத்தப்பட்ட வடிவம்.

microphone : நுண்பேசி : 1. ஒலி அலைகளை தொடர்முறை (analog) மின்சாரச் சமிக்கைகளாய் (signals) மாற்றித் தரும் சாதனம், நுண்பேசி யின் வெளியீட்டை ஒரு கூடுதல் வன் பொருள், கணினி ஏற்கத்தகு இலக்க முறைத் தகவலாய் மாற்றித்தரமுடியும். (எ-டு) பல்லூடக ஆவணங்களைப் பதிவு செய்தல்; ஒலிச் சமிக்கைகளை பகுத்தாய்தல். 2. ஆப்பிள் மெக்கின் டோஷ் கணினியில் இயங்கும் ஒரு தகவல் தொடர்பு நிரல்.

microprocessor chips : நுண் பகுப்புச் சிப்புகள்; நுண்பகுப்புச் சில்லுகள்.

microspace justification : நுணிஇட ஓரச்சீர்மை : உரை ஆவணங்கள் இரு ஒரங்களிலும் சீராக இருப்பின் அழகான தோற்றத்தைத் தரும். இவ்வாறு ஆவணங்களின் உரைப் பகுதியின் ஒரங்களைச் சீராக ஆக்கும் பொருட்டு சொற்களின் இடையே யும் ஒரு சொல்லில் எழுத்துகளுக் கிடையேயும் மெல்லிய இட வெளியை இட்டு நிரப்புதல். இதனை துண் ஓரச்சீர்மை என்றும் கூறுவர். சொல்லில் இடம்பெறும் அதிகப்படி யான இடவெளி சொல்லின் தோற்ற அழகைத் தோற்கடித்துவிடும்.

microtransaction : நுண் பரிமாற்றம் : 5 டாலருக்கும் குறைவான தொகைக் கான ஒரு வணிகப் பரிமாற்றம் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

microwave relay : நுண்ணலை பரப்புகை : ஒரு கிகா ஹெர்ட்ஸுக் கும் கூடுதலான அலைவரிசையில் இரு முனைகளுக்கிடையே வான் அலைபரப்பின் மூலம் ஏற்படுத்தப் படும் தகவல் தொடர்பு இணைப்பு.

middle level language : இடைநிலை மொழி. எந்திர மொழி போன்ற அடி நிலை மொழிகள் திறனும் வேகமும், பிற உயர்நிலை மொழிகளின் எளி மையும் கொண்டிருப்பதால் சி- மொழி இவ்வாறு அழைக்கப் படுவதுண்டு.

middleware : இடைப்பொருள்; இடைமென்பொருள் : இரண்டு அல்லது மேற்பட்ட வகை மென் பொருள்களுக்கு இடையே இருந்து தகவலை மொழி பெயர்த்துத் தரும் ஒருவகை மென்பொருள். இது பலவகைப்படும். பொதுவாக ஒரு பயன்பாட்டுக்கும் ஒர் இயக்க முறைமைக்கும் இடையே செயல் படும். அல்லது ஒரு பயன்பாட்டுக் கும் ஒரு தரவுத் தள மேலாண்மை முறைமைக்கும் இடையே இருந்து செயல்படும். (எ-டு) கோர்பா மற்றும் பிற பொருள் முகவர் நிரல் கள், பிணைய மென்பொருள்கள் மற்றும் கட்டுப்பாட்டு நிரல்கள்.

MIDI : மிடி; எம்ஐடிஐ : இசைக் கருவி இலக்கமுறை இடைமுகம் என்று பொருள்படும் Musical Instrument Digital Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இசை ஒருங்கிணைப்பிகள், இசைக் கருவிகள் இவற்றை கணினிகளுடன் இணைக்கும் ஒரு நேரியல்(serial) இடைமுக தர வரையறை. மிடி வரை யறை பாதி வன்பொருள் அடிப்படை யிலானது. பாதி, இசையும் ஒலியும் எந்த முறையில் குறியாக்கப்பட்டு மிடிச் சாதனங்களுடன் தொடர்பு படுத்தப்படுகின்றன என்ற விளக்கத்தை கொண்டிருக்கும். இது, ஒலியின் தொனி மற்றும் ஒலி அளவுபோன்ற பண்புக் கூறுகள் 8 துண்மி (bit) இலக்கமுறைத்(digital)