பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



.ml

291

modem bank



சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.ml : .எம்எல் : ஒர் இணைய தள முகவரி மாலி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

.mm : .எம்எம் : ஒர் இணைய தள முகவரி மியன்மார் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

MMX : எம்எம்எக்ஸ் : பல்லூடக நீட்டிப்புகள் எனப் பொருள்படும் (Multimedia Extensions) என்ற தொடரின் சுருக்கம். இன்டெல் 80x86 குடும்பச் செயலிகளில் ஒரு குறிப் பிட்ட வகைச் செயலிகள். பல்லூடக மற்றும் தகவல் தொடர்புப் பயன் பாடுகளுக்கான கூடுதல் திறன் கொண்டவை. இவற்றின் ஆணைத் தொகுதியில் அதற்கான கூடுதல் ஆணைகளைக் கொண்டவை.

.mn : .எம்என் : ஒர் இணைய தள முகவரி மங்கோலியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

MNP10 : எம்என்பீ10 : மைக்ரோகாம் பிணைய நெறிமுறை என்று பொருள் படும் (Microcom Networking Protocol Class 10) என்ற தொடரின் சுருக்கம். தொடர்முறை செல் தொலைபேசி (Analog Cellular Telephone) களுடன் இணைக்கப்படும் மோடம் இணைப்பு களுக்கான தொழிலகச் செந்தரத் தகவல் தொடர்பு நெறிமுறை.

.mn.us : .எம்என்.யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டு மின்னசோட்டா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.mo : .எம்ஓ : ஒர் இணைய தள முகவரி, மக்காவ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

mobile computing : நடமாடும் கணிப்பணி; பயணக் கணிப்பணி : பயணம் செய்து கொண்டிருக்கும் போது கணினியைப் பயன்படுத்தும் செயல்பாடு. பயணக் கணிப் பணிக்கு மேசைக் கணினியைவிட மின்கலத் தில் இயங்குகின்ற, கையிலெடுத்துச் செல்லத்தக்க கணினியே ஏற்றது.

model dialog : உருப்படிவ உரையாடல்.

mode, batch processing : தொகுதிச் செயலாக்க பாங்கு.

mode, reset : மாற்றமைவு பாங்கு.

modec : மோடெக் : தொலை தகவல் தொடர்பில், இலக்கமுறையில் (digital) மோடத்துக்குரிய தொடர் முறைக் சமிக்கைகளை உருவாக்கும் சாதனம். மாடுலேட்டர், டீமாடுலேட் டர் ஆகிய சொற்கள் இணைந்ததே மோடம். கோடர், டீகோடர் ஆகிய சொற்கள் இணைந்தது கேடெக். மோடம், கோடெக் ஆகிய சொற்கள் இணைந்து உருவானது மோடெக்.

model geometric : வடிவ மாதிரியம்.

modem bank : இணக்கி வங்கி; மோடம் வங்கி : ஒர் இணையச் சேவையாளர் அல்லது ஒரு பிபிஎஸ் சேவை இயக்குநர் பராமரிக்கின்ற வழங்கன் கணினியுடன் அல்லது தொலைஅணுகு வேன் (WAN) பிணையத்தில் இணைக்கப்பட்ட இணக்கி (மோடம்)களின் தொகுப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது. தொலைதுாரப் பயனாளர்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஒற்றைத் தொலைபேசி எண்ணை அழைத்