பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



modifier

293

monochrome display


 தகவலை ஒரு வட்டில் பதிய முடி யும். பெருவாரியான நிலைவட்டு களில் இம்முறையே பயன்படுத்தப் படுகிறது. எனினும் ஆர்எல்எல் (RLL-Runlength Limited) குறியாக்க முறையைக் யைக் காட்டிலும் திறன் குறைந்ததே.

modifier : திருத்தியமைப்பி; மாற்றி

modifier, character : எழுத்து மாற்றி யமைப்பி.

modifier key : மாற்றம் செய் விசை : விசைப் பலகையிலுள்ள ஒரு விசை; அதை அழுத்திக் கொண்டு வேறொரு விசையை அழுத்தினால் அதன் இயல்பான பணியைச் செய்யாமல் வேறு பணியைச் செய்யும்.

modular : கூறுநிலை.

modular design : கூறுநிலை வடிவ மைப்பு : வன்பொருள் அல்லது மென் பொருள் வடிவமைப்பில் ஒர் அணுகு முறை. இம்முறையில் ஒரு திட்டப் பணி சிறுசிறு கூறுகளாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு கூறும் தனியே உருவாக்கப்பட்டு, சோதிக்கப்பட்டு, இறுதியில் ஒருங்கிணைக்கப்பட்டு இறுதி வடிவம் பெறும். ஒவ்வொரு கூறும் ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்றுமாறு வடிவமைக்கப் படும். இம்முறையினால் உருவாக்க நேரமும், பரிசோதனை நேரமும் மிச்சமாகும். சிலபல கூறுகளை ஒன்றுக்கு மேற்பட்ட திட்டப் பணி களுக்கும் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.

modular element : கூறுநிலை உருப்பு.

modulate : பண்பேற்று : ஒரு சமிக் கையின் சில பண் பியல்புகளை ஒரு நோக்கத்துடன் மாற்றியமைத்தல். பொதுவாக தகவலை வேறிடங் களுக்கு அனுப்பிவைக்கும் பொருட்டு இவ்வாறு பண்பேற்றம் செய்வதுண்டு.

modulatanty : கூறு நிலைமை.

modulation/demodulation : பண்பேற் றம்/பண்பிறக்கம்.

modulation protocol : கூறுநிலை நெறிமுறை.

moire : மங்கல்; தெளிவின்மை : பொருத்தமற்ற தெளிவுக்கூறுடன் ஒரு படிமம் திரையில் காட்டப்படும் போது அல்லது அச்சிடப்படும்போது மங்கலாக, மினுக்கலுடன் தெளி வின்றி இருத்தல். தெளிவின்மைக்கு பல அளபுருக்கள் காரணமாய் உள்ளன. படிமத்தின் அளவும் தெளிவும், வெளியீட்டுக் கருவியின் அளவு-தெளிவுடன் ஒத்தில்லாத போது இந்த நிலை ஏற்படும்.

molecules : மூலக்கூறுகள்.

monitor programme : கண்காணிப்பு நிரல்.

monochrome adapter : ஒற்றைநிறத் தகவி : ஒரேயொரு முன்புல நிறத் தில் ஒளிக்காட்சிக் சமிக்கையை உருவாக்கும் திறனுள்ள ஒர் ஒளிக் காட்சி ஏற்பி. சிலவேளைகளில் ஒற்றை நிறத்தையே வெவ்வேறு அடர்வுகளில் காண்பிக்கும், சாம்பல் அளவீட்டைப் போன்றது.

monodic boolean operator : ஏக பூலி யன் இயக்கர்; ஏக பூலியன் செயற் குறி.

monochrome display : ஒற்றைநிறத் திரைக்காட்சி : 1. ஒற்றை நிறத்தில் மட்டுமே தோன்றும் ஒளிக்காட்சித் திரைக்காட்சி. அந்த ஒற்றைநிறம், பயன்படுத்தப்படும் பாஸ்பரைப் பொறுத்தது. அனேகமாக பச்சை அல்லது ஆம்பர் நிறமாக இருக்கும்.