பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

MPEG

296

MPR II


 குறும்பெயர். கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தகவல்களை இறுக்கிச் சுருக்குவதற்கான தரவரையறைகள். தகவல் தொழில்நுட்பத்துக்கான ஐஎஸ்ஓ/ஐஇசி கூட்டுத் தொழில் நுட்பக்குழு உருவாக்கியவை. எம்பெக் தர வரையறை பல்வகைப் பட்டவை. வெவ்வேறு சூழ்நிலை களில் செயல்படுவதற்கென வடி வமைக்கப்பட்டவை.

MPEG1 : எம்பெக்1 : சிடிரோம் தொழில்நுட்பத்துக்கான மூல எம்பெக் தர வரையறை. ஒளிக்காட்சி மற்றும் கேட்பொலித் தகவல்களைச் சேமிக்கவும் மீட்டெடுக்கவும் வடிவமைக்கப்பட்டது. 1.5 எம்பி பீஎஸ் வரையிலான நடுத்தர அலைக் கற்றை இரண்டு கேட்பொலித் தடங் கள், பின்னலுறா ஒளிக்காட்சி ஆகிய வற்றை எம்பெக்-1 வரையறுக்கிறது.

MPEG2 : எம்பெக்2 எம்பெக்-1 தர வரையறையின் நீட்டித்த வடிவம். தொலைக்காட்சி அலைபரப்புக்காக (ஹெச்டிடீவி உட்பட) வடிவமைக் கப்பட்டது. 40 எம்பிபீஎஸ் வரை யிலான உயர்நிலை அலைக் கற்றையை, ஐந்து கேட்பொலித் தடங்கள், பலதரப்பட்ட சட்ட அளவு கள் மற்றும் பின்னலுறு ஒளிக் காட்சிகளை வரையறுக்கிறது.

MPEG3 : எம்பெக்3 : தொடக்கத்தில் உயர் வரையறைத் தொலைக் காட்சிக்கான (HDTV) எம்பெக் தர வரையறையாகும். ஆனால் இதற்குப் பதிலாக எம்பெக்-2 பயன்படுத்த முடியும் என்பதால், எம்பெக்-3 மதிப்பிழந்தது.

MPEG4 : எம்பெக்4 : ஒளிக்காட்சித் தொலைபேசிகள் மற்றும் பல்லூட கப் பயன்பாடுகளுக்காக வடிவ மைக்கப்படும் தர வரையறை. எம்பெக்-4 64 கேபிபீஎஸ் வரையி லான அடிநிலை அலைக்கற்றையை வழங்குகிறது.

.mpg : .எம்பீஜி : எம்பெக் குழுவினர் வரையறுத்த வடிவமைப்பைப் பயன் படுத்தி இறுக்கிச் சுருக்கப்பட்ட கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தகவலைக் கொண்ட, குறியாக்கம் செய்யப்பட்ட தரவுத் தாரைகளை அடையாளம் காட்டும் கோப்பு வகைப்பெயர்.

MP/M : எம்பீ/எம் : நுண்கணினிகளுக் கான பல்பணி நிரல் எனப் பொருள் படும் Multi tasking Programme for Micro Computers என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சிபீ/எம் இயக்கமுறைமையின் பல்பணி பல்பயனாளர் பதிப்பாகும்.

MPOA : எம்பீஒஏ : ஏடீஎம் வழியாக பல் நெறிமுறை என்று பொருள் படும் Multi Protocol Over ATM என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஏடீஎம் குழு முன்வைத்த வரன்முறையாகும் இது. (ஏடீஎம் என்பது ஒத்திசையா பரிமாற்றல் பாங்கு என்று பொருள்படும் Asynchronous Transfer Mode என்பதன் சுருக்கம். ஏடீஎம் பயனாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இணைந்த அமைப்பே ஏடீஎம் குழு). தற் போதுள்ள ஈதர்நெட், டோக்கன் ரிங் மற்றும் டீசிபி/ஐபீ பிணையங்களு டன் ஏடீஎம்மை ஒருங்கிணைப்பதற் கான வரன்முறைகளாகும்.

ΜΡR ΙΙ : எம்பீஆர் ll : விஎல்எஃப் கதிர்வீச்சு உட்பட ஒளிக்காட்சித் திரையகத்திலிருந்து உமிழப்படும் காந்த மற்றும் மின்புலத்தைக் கட்டுப் படுத்தும் தர வரையறை ஆகும்.