பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



multidimensional

298

multipart forms


 multidimensional : பல்பரிமாண.

multifile sorting : பல்கோப்பு வரிசை யாக்கம் : ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளில் உள்ள தகவல்களை வரிசையாக்கம் செய்யும் முறை.

multifinder: பல்பணி இயக்கி; மல்ட்டி ஃபைண்டர் : ஆப்பிள் மெக்கின் டோஷின் ஃபைண்டர் பயன்பாட் டின் ஒரு பதிப்பு. பல்பணிகளை ஒரே நேரத்தில் இயக்க வழிசெய்யும். ஒரே நேரத்தில் பல்வேறு பயன்பாடுகள் நினைவகத்தில் தங்கியிருக்க வகை செய்வதே இதன் முதன்மையான பயன். ஒற்றைச் சுட்டிச் சொடுக்கில் பயன்பாடுகளுக்கிடையே மாறிக் கொள்ளலாம். ஒரு பயன்பாட்டி லுள்ள தகவலை இன்னொன்றுக்கு நகல் எடுக்கலாம். இயக்கத்தில் இருக்கும் பயன்பாடு மெய்யான பல பணிச் செயல்பாட்டை அனுமதிக்கு மெனில் பின்புலத்தில் வேறொரு பணியை இயக்க முடியும்.

multi lounching : பல்முனை ஏவல்.

multilink point - to - point protocol : பல்தொடுப்பு முனைக்கு முனை நெறிமுறை : இணையத்தில் கணினி கள் தமது அலைக்கற்றைகளை ஒருங் கிணைக்க தம்டையே பல மெய்ம் மைத் தொடுப்புகளை (real links) ஏற்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் நெறிமுறை. ஒற்றை மெய்ம்மைத் தொடுப்பின் கொள்திறனை விட அதிகக் கொள்திறனுள்ள ஒரு மெய் நிகர் தொடுப்பை (virtual link) இந்த நுட்பம் உருவாக்குகிறது.

multimedia : பல்லூடகம் : உரை, ஒலி, வரைகலை, அசைவூட்டம், ஒளிக்காட்சி ஆகியவற்றின் தொகுப்பு. கணினி உலகில் பல்லூடகம் என்பது மீஊடகத்தின் (hypermedia) ஓர் அங்கமாக விளங்கு கிறது. மீ ஊடகம் என்பது மேற் காணும் ஐந்து ஊடகங்களையும் மீஉரையுடன் (Hypertext) இணைக்கிறது.

multimedia conference : பல்ஊடக கருத்தரங்கு; பல்லூடகக் கலந்துரை யாடல்.

multimedia distributed parallel processing : பல்ஊடக பகிர்ம இணைச் செயல்பாடு.

multimedia PC : பல்லூடக பீசி (கணினி) : பல்லூடக வசதிபெற்ற சொந்தக் கணினி. இதற்கான மென் பொருள், வன்பொருள் தர அளவீடு களை பல்லூடக பீசி விற்பனைக் குழு (Multimedia PC Marketing Council) நிர்ணயம் செய்துள்ளது. ஒரு பீசியின் ஒலி, ஒளிக்காட்சி, சிடி-ரோம் இயக்கத் திறன்களின் குறைந்தபட்ச அளவீடுகளை இது வரையறுத்துள்ளது.

multinode computer : பல்கணு கணினி : பல செயலிகளைப் பயன் படுத்தும் ஒரு கணினி, மிகச் சிக்கலான பணியில் கணக்கீடுகளை இவை பகிர்ந்துகொள்ளும்.

multipart forms : பல்பகுதி படிவங்கள் : பல்லடுக்குப் பல்தாள் படிவங்கள்: கணினியில் தொட்டச்சுப் பொறி களில் (impact printers) அச்சுக்குப் பயன்படுத்தப்படும் ஒருவகைத் தாள் தொகுதி. இருதாள்களுக்கிடையே கரியத் தாள் (carbon paper) இருக்கும். அல்லது ஒவ்வொரு தாளின் பின் பக்கமும் ஒருவகை வேதிப்பொருள் பூசப்பட்டிருக்கும். இது கரியத்தாள் போன்றே செயல்படும். கடைசித் தாளில் இப்பூச்சு இருக்காது. ஒரே அச்சில் பல படிகளை எடுக்க இத் தாள் பயன்படுகிறது. ஒரு தொகுதி யில் மொத்தம் எத்தனை படிகள்