பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



nested transaction

306

net.god


|

மைப்புக்குள் அதேபோன்ற கட்டமைப்பை இடம்பெறச் செய்தல். (எ-டு) 1. ஒரு தரவுத் தளத்தில் உள்ள அட்டவணைக்குள் வேறோர் அட்டவணை இருக்கலாம். 2. ஒரு நிரலில் உள்ள செயல்முறைக்குள் இன்னொரு செயல்முறை வரை யறுக்கப்படலாம். 3. ஒரு தரவுக் கட்டமைப்பில்(data structure),ஓர் ஏட்டிலுள்ள (record) ஒரு புலம் (field) இன்னோர் ஏடாக இருக்கலாம்.

nested transaction:வலைபின்னல் பரிமாற்றம் : ஒரு நிரலில், ஒரு பரந்த பரிமாற்றச் செயல்பாட்டினுள் வேறொரு செயல்பாடு அல்லது செயல்பாடுகளின் வரிசை இடம்பெறலாம். புறத்தே இயங்கும் பெரிய பரிமாற்றத்தை முடிவுக்குக் கொண்டுவராமலே உள்ள இயங்கும் சிறிய பரிமாற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

nesting loop : ஒன்றுள் ஒன்றான மடக்கி, .net : .நெட் : 1. இணையக் களப்பெயர் அமைப்பில் மேல்நிலை களத்தைக் குறிக்கும் சொல். இணையச் சேவையாளர் என்பதை அடையாளங் காட்டும் .நெட் என்பது முகவரியின் இறுதியில் இடம் பெறும். 2. மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தொழில் நுட்பம். மொழிசாரா பணித்தளத்தை (Language Independent Platform) வழங்கும் ஒரு தொழில்நுட்பம். விசுவல் பேசிக்/விசுவல் சி++, சி#, விபிஸ்கிரிப்ட், ஜேஸ்கிரிப்ட் போன்ற மொழிகளில் எழுதப்படும் நிரல்களை மொழிமாற்றம் செய்து இடைநிலை மொழி நிரலாக மாற்றியமைத்து பொதுமொழி இயக்கச் சூழலில்(Common Language RuntimeCLR) இயக்க முடியும்.

net1 : வலை; இணையம் : இணையத்தில் மக்களையும், நிறுவனங்களையும் குறிக்கப் பயன்படும் முன்னொட்டு (Prefix) (எ-டு) இணையச் சமூகத்தில் மிகவும் மரியாதைக்குரிய நபரை இணையக் கடவுள் (net.god) என அழைப்பர்.

net2 : நெட் வலை : 1. இணையம் (Internet) என்பதன் சுருக்கம். 2. யூஸ்நெட் (Usenet)-டின் சுருக்கம்.

net address: வலை முகவரி; இணைய முகவரி: வைய விரி வலை (World Wide Web)-யின் முகவரி. இதனை யூஆர்எல் என்றும் அழைப்பர். உலகளாவிய வள இடங்காட்டி. (Universal Resource Locator)என்பதன் சுருக்கம். தனித்த (Unique) அல்லது சீரான (Uniform) வள இடங்காட்டி என்று கூறுவாரும் உண்டு.

NetBEU : நெட்பிஇயுஜ : நெட் பயாஸ் மேம்பட்ட பயனாளர் இடை முகம் (Net BIOS Enhanced User Interface) என்பதன் சுருக்கம். பிணைய இயக்க முறைமைகளுக்கான மேம்படுத்தப்பட்ட நெட் பயாஸ் நெறிமுறை. லேன் மானேஜர் (Lan Manager) வழங்கன் கணினிகளுக்காக ஐபிஎம் நிறுவனம் உருவாக்கியது. இப்போது வேறுபல பிணையங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

netBSD : நெட்பிஎஸ்டி : தன்னார்வ முயற்சியினால் உருவாக்கப்பட்ட பிஎஸ்டி யூனிக்ஸ் இயக்க முறைமையின் இலவசப் பதிப்பு. நெட் பிஎஸ்டி பல்வேறு வன்பொருள் பணித்தளங்களில் செயல்படக் கூடியது. போஸிக்ஸ் (POSIX) தர வரையறைக்கு ஒத்திசைவானது.

net.god இணையச் இணையக் கடவுள் :இணைய சமூகத்தில் மிகவும்