பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.nt.ca

317

number crunching


|

(ARPAnet) பதிலாக சிவில் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது.1995 ஆண்டுவரை இணையத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்தது. அமெரிக்க நாட்டில் இணையத்துக் கான முதுகெலும்புச் சேவைகளை இப்போது தனியார் பிணையங்கள் வழங்கி வருகின்றன.

.nt.ca : .என்.டி.சி.ஏ : ஒர் இணைய தள முகவரி கனடா நாட்டின் வட மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

ΝΤFS :என்டீ.எஃப்எஸ் : என்டி கோப்பு முறைமை என்று பொருள் NT File System என்பதன் சுருக்கம். விண்டோஸ் என்டி இயக்க முறைமைக்கென தனிச்சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட உயர்நுட்பக் கோப்பு முறைமை. இதில், நீண்ட கோப்புப் பெயர் இயலும். முழுமையான பாதுகாப்புள்ள அணுகல் கட்டுப்பாடு, கோப்பு முறைமை மீட்பு, மிகப் பரந்த சேமிப்பு ஊடகம் மற்றும் விண்டோஸ் என்டி போசிக்ஸ் (POSIX) துணை முறைமைக்கான சிறப்புக் கூறுகளை உள்ளடக்கியது. பொருள் நோக்குப் பயன்பாடுகளையும் ஏற்கிறது. அனைத்துக் கோப்புகளையும் பயனாளர் மற்றும் முறைமை வகுத்த பண்புக் கூறுகள் கொண்ட பொருள்களாகவே கருதிச் செயல்படுகிறது.

NTP : என்டீபீ : பிணைய நேர நெறி முறை என்று பொருள்படும் Network Time Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கணினியின் உள்ளமை நேரத்தையும் அது தொடர்புகொள்ளும் வழங்கன் கணினி அல்லது வானொலி, செயற்கைக்கோள் வாங்கி, மோடம் போன்ற பிறவற்றின் நேரத்தையும் ஒத்திசைவாக்கப் பயன்படுகிறது. குறும்பரப்புப் பிணையங்களில் ஒரு மில்லி வினாடிக்குள்ளானதுல்லியம் பெற முடியும். விரிபரப்புப் பிணையங்களில் துல்லியம் சில பத்து மில்லி வினாடிகள்.

N-type semiconductor : என்-வகை குறைகடத்தி : மின்சாரக் கடத்தல் மின்னணு மூலம் நடைபெறும் குறை கடத்திப் பொருள். P-வகை குறை கடத்திகளில் மின்கடத்தல், துளைகள் (holes - electron vacancies) மூலம் நடைபெறுகிறது. மிகை மின்னணுக் கொண்ட மாசுப்பொருள் சேர்த்து N-வகைக் குறைகடத்திகள் தயாரிக்கப்படுகின்றன.

.nய : .என்யு : ஒர் இணைய தள முகவரி நியூ (Niue) நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

nudge shadow : தள்ளு நிழல்.

nuke : அழி, முறி : 1. ஒரு கோப்பினை, கோப்பகத்தை அல்லது நிலைவட்டு முழுமையையும் அழித்தல். 2. ஒர் இயக்க முறைமையின், ஒரு பயன்பாட்டின் அல்லது ஒரு நிரலின் செயல்பாடு ஒன்றை நிறுத்தி வைத்தல்.

null instruction :பயனிலாஆணை: வெற்று ஆணை.

null value : வெற்று மதிப்பு.

number base : எண் ஆதாரம்.

number crunching :எண் நொறுக்கல்; எண் அரைத்தல்: ஏராளமான எண்வகைத் தகவல்களின் கணக்கீடு களைக் குறிக்கிறது. மீண்டும்