பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

number generato

318

.nz


|

மீண்டும் செய்கிற கணக்கீடாக இருக்கலாம். கணிதமுறையில் மிகச் சிக்கலானதாக இருக்கலாம். அல்லது இரண்டும் சேர்ந்ததாயிருக்கலாம். ஆனாலும் தகவல் உள்ளிட்டு வெளியீட்டுச் செயல்பாடுகளை இது குறிப்பதில்லை. கணினியுள் நடை பெறும் அகநிலைச் செயலாக் கத்தையே குறிக்கிறது. எண்ணியல் துணைச் செயலிகள் இதுபோன்ற பணிகளை மேற்கொள்கின்றன. இதனால் கணினிகளின் செயல்திறன் பெருமளவு அதிகரிக்கப்படுகிறது.

number generator : எண் இயற்றி.

numlock key : எண் பூட்டு விசை.

number system, binary : இரும எண் முறைமை.

numbers, random: குறிப்பிலா எண்கள்.

numerical expression : எண்முறைத் தொடர்.

Numeric Lock Key : எண்பகுதி பூட்டுவிசை :நிலைமாற்று விசை. நிகழ்த்தும்போது (turned on) விசைப் பலகையிலுள்ள எண்பகுதியை செயல்பாட்டுக்குக் கொண்டு வருகிறது. அதன்பின் எண் விசைகளை ஒரு கணிப்பான் (Calculator) பாணியில் தகவல் உள்ளீடு செய்யப் பயன்படுத்த முடியும்.

numeratorldenominator :பின்ன எண் பகுதி|விகுதி. numeric type : எண் வகை.

.nyc.ny.us : என்ஒய்சி.என்ஒய்.யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாநிலத்திலுள்ள நியூயார்க் நகரைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.ny.us : என்ஒய்.யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.nz : என்இஸட் : ஒர் இணைய தள முகவரி நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.