பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

online state

323

Open Group


பெரும்பாலான நிகழ்நிலை தகவல் சேவை நிறுவனங்கள் தத்தமது சொந்த சேவைகளை மட்டுமின்றி பொதுவான இணையத் தொடர்பையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றன. அமெரிக்கா ஆன்லைன், காம்புசெர்வ், மைக்ரோசாஃப்ட் நெட்வொர்க் ஆகியவை அமெரிக்காவில் நுகர்வோருக்கான மிகப்பெரும் நிகழ்நிலைத் தகவல் சேவை நிறுவனங்கள் ஆகும்.

online state : நிகழ்நிலை நிலைமை : ஓர் இணக்கி (மோடம்) இன்னோர் இணக்கியுடன் தகவல் தொடர்பு மேற்கொண்டிருக்கும் நிலை.

online transaction processing : நிகழ்நிலை பரிமாற்றச் செயலாக்கம்.

on/off : நிகழ்/அகல்.

on the fly : ஓட்டத்திலேயே; இயக்கத்திலேயே : இயல்பான செயல்பாட்டுக்கு இடையுறு விளைவிக்காமலே அதன் இயக்கத்தை நிறுத்தாமலேயே தேவையான ஒரு பணியையோ ஒரு செயலாக்கத்தையோ மேற்கொள்வதை இவ்வாறு குறிப்பர். எடுத்துக்காட்டாக, ஒரு ஹெச்டீஎம்எல் கோப்பினை இயக்கத்திலேயே திருத்த முடியும் என்று கூறுவதுண்டு. ஏனெனில் ஓர் வலைத்தளத்தை மூடாமலேயே அத்தளத்திலுள்ள ஒரு வலைப்பக்கத்தின் (ஹெச்டீஎம்எல் ஆவணத்தின்) உள்ளடக்கத்தை மாற்றியமைக்க முடியும்.

on web page : வலைப் பக்கத்தில்,

opcode : செய்பணிக் குறிமுறை.

open an existing database: இருக்கும் தரவுத் தளத்தை திற.

open command : திற ஆணை.

open containing folder : உள்கொண்ட கோப்புறை திற.

open database: தரவுத் தளத்தைத் திற.

OpenDoc : ஓப்பன்டாக் : பொருள் நோக்கிலான ஒரு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Application Programming Interface). வெவ்வேறு பணித்தளங்களில் உருவாக்கப்பட்ட பல்வேறு தனித்த நிரல்கள் ஒற்றை ஆவணத்தில் ஒன்றாக இணைந்து செயல்பட வழிவகுக்கிறது. ஒஎல்இ-யைப் போன்றே படிமங்கள், ஒலி, ஒளிக்காட்சி, பிற ஆவணங்கள், பிற கோப்புகள் ஆகியவற்றை உட்பொதித்து அல்லது தொடுப்பேற்படுத்தி ஆவணம் உருவாக்க ஒப்பன்டாக் அனுமதிக்கிறது. ஆப்பிள், ஐபிஎம், ஆப்ஜெக்ட் மேனேஜ்மென்ட் குரூப் மற்றும் எக்ஸ் கன்சோர்ட்டியம் ஆகியவை இணைந்த கூட்டணி ஒப்பன்டாக்கை ஆதரிக்கிறது.

Open Financial Connectivity : திறந்தநிலை நிதியியல் இணைப்பு : மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வகுத்துள்ள வரன்முறை. மின்னணு வங்கிச் சேவைகளுக்கும் மைக்ரோசாஃப்ட் மணி (Microsoft Money) என்னும் சொந்த நிதிமென்பொருளுக்கும் இடையேயான ஒர் இடைமுகம் ஆகும்.

Open Group : ஓப்பன் குரூப்; திறந்தநிலைக் குழு : கணினித்துறையில் வன்பொருள், மென்பொருள் உற்பத்தியாளர்கள், பயனாளர்கள் ஆகியோர் இணைந்த ஒரு கூட்டமைப்பு. பல்தரப்பட்ட விற்பனையாளர்களின் தகவல் அமைப்பை வளர்த்தெடுப்பதே இதன் நோக்கம். 1996இல் ஓப்பன் குரூப் நிறுவப்