பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

OLTP

322

online information service


என்கிறோம். படத்தை நகலெடுத்து ஆவணத்தில் ஒட்டிவிடுவதை பொருள் உட்பொதிப்பு என்கிறோம். மூலப் படத்தில் செய்யப்படும் மாறுதல்கள் ஆவணப் படத்தில் பிரதிபலிக்காது. படத்தை மீண்டும் உட்பொதிக்க வேண்டும்.

OLTP : ஒஎல்டீபீ : நிகழ்நிலைப் பரிமாற்றச் செயலாக்கம் என்று பொருள்படும் (Online Transaction Processing) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு தரவுத்தள மேலாண்மை அமைப்பில், தகவல்கள் உள்ளீடு செய்யப்பட்ட உடனேயே அவை பரீசீலிக்கப்பட்டு முதன்மைக் கோப்புகளின் தகவல்கள் புதுப்பிக்கப்பட்டுவிடும். நிதியக் கணக்கு வைப்புகளுக்கும், சரக்குக் கையிருப்பு மேலாண்மைக்கும் ஒஎல்டீபீ மிகவும் பயனுள்ளது.

.om : ஓம்: ஓர் இணைய தள முகவரி ஒமன் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்யெர்.

OMA : ஓஎம்ஏ : பொருள் மேலாண்மைக் கட்டுமானம் என்று பொருள்படும் Object Management Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பொருள் மேலாண்மைக் குழு (Object Management Group) உருவாக்கிய பொருள்நோக்கு பகிர்ந்தமை செயலாக்கத்திற்கான வரையறை. ஓஎம்ஏ, கோர்பா (CORBA - Common Object Request Broker Architecture) பொதுப் பொருள் கோரிக்கை தரகர் கட்டுமானத்தையும் உள்ளடக்கியது.

one address : ஒற்றை முகவரி.

one gate :ஒரு வாயில்.

one-off : ஒன்றுமட்டும் : 1. ஒரு பொருளை ஒரே நேரத்தில் மொத்தமாகத் தயாரிக்கும் முறைக்குப் பதிலாக ஒரு நேரத்தில் ஒன்று என்ற முறையில் தயாரிப்பது. 2. சிடி ரோம் எழுதும் பொறி ஒன்றில் ஒரு நேரத்தில் ஒரு நகல் மட்டுமே உருவாக்கும் முறை.

online analytical processing : நிகழ்நிலைப் பகுப்பாய்வுச் செயலாக்கம்.

online banking : நிகழ்நிலை வங்கி முறை.

online community : சமூகம் : நிகழ்நிலைச் சமூகம்: 1. இணைய மற்றும் வையவிரி வலை ஆகியவற்றின் பயனாளர்களைக் கொண்ட தொகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது. 2. தம் அரசாங்கம் பற்றியும், பொது மக்களைப் பாதிக்கின்ற பிரச்சினைகள் குறித்தும் நிகழ்நிலை அரசியல் மன்றங்களில் விவாதத்திற்காக எடுத்துரைக்கின்ற மக்கள் குழு. 3. ஒரு குறிப்பிட்ட செய்திக் குழு, அஞ்சல் பட்டியல், எம்யுடி, பிபிஎஸ் மற்றும் பிற நிகழ்நிலை மன்றத்தை அல்லது குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள்.

online fonts : நிகழ்நிலை எழுத்துருக்கள்.

online information service : நிகழ்நிலைத் தகவல் சேவை : தரவுத்தளங்கள், கோப்புக் காப்பகங்கள், கலந்துரையாடல்கள், அரட்டைக் குழுக்கள் மற்றும் இதுபோன்ற அமைப்புகளிலுள்ள தகவல்களை தொலைபேசி அல்லது தனித்த தகவல் தொடர்பு இணைப்பு அல்லது இணையம் வழியாக அணுகுவதற்கு வசதி செய்துதரும் வணிகமுறை.