பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

outlook express

330

overwrite mode


outlook express : அவுட்லுக் எக்‌ஸ்பிரஸ் : ஒரு மின்னஞ்சல் மென் பொருள்.

output channel, input : உள்ளீட்டு வெளியீட்டுத் திட்டம்.

output signal, zero: வெளியீடில்லாக்குறிகை.

oval : நீள்வட்டம்.

oval shape : நீள்வட்ட வடிவம்; முட்டை வடிவம்.

over drive socket: கூடுதல் இயக்ககப் பொருத்துவாய்.

over flow, arthmetic : கணக்கீட்டு வழிவு.

overlay ; மேல்விரி1 : 1. வட்டில் சேமிக்கப்பட்டுள்ள நிரல் மிகப்பெரியதாக இருப்பின் அதனை முழுமையாக நினைவகத்தில் ஏற்ற முடியாது. அத்தகைய நிரல்களுக்கு மேல்விரி கோப்புகள் தனியாக உருவாக்கப்படுகின்றன. நிரலை நினைவகத்தில் ஏற்றும்போது மேல்விரி கோப்பிலுள்ள ஒருபகுதி நிரல் மட்டுமே நினைவகத்தில் ஏற்றப்படும். தேவைப்படும்போது அடுத்த பகுதி ஏற்றப்படும். அது நினைவகத்திலுள்ள முதல் பகுதியின் மீதே மேலெழுதப்படும். இந்த ஏற்பாட்டின்படி மிகப்பெரிய நிரலையும் நினைவகத்தில் ஏற்றி இயக்க முடிகிறது என்றபோதிலும் ஒரளவு இயக்க வேகம் குறைய வாய்ப்புள்ளது. 2. குறிப்பிட்ட பண்புக் கூறுகளை அடையாளம் காணும் பொருட்டு திரை, மேசை அல்லது விசைப்பலகை மீது மேல்விரிக்கப்படும் அச்சிட்ட படிவம்.

overlay2 : மேல்விரி2 : 1. கணினி வரை கலையில் ஒரு படிமத்தின் மீது இன்னொரு படிமத்தை மேல் விரித்தல். 2. ஒளிக்காட்சிகளில், நிகழ்நேர அல்லது முன்பதியப்பட்ட ஒளிக்காட்சிச் சமிக்கைகளின் மீது கணினியில் உருவாக்கப்பட்ட ஒரு வரை கலைப்படிமத்தை மேல்பொருந்தச் செய்தல்.

overloading constructior : பணிமிகுப்பு ஆக்கி.

overwrite mode : மேலெழுது பாங்கு: ஓர் ஆவணத்தில் உரையைத்தட்டச்சுச் செய்யும்போது புதிதாகத் தட்டச்சு செய்யப்படும் எழுத்துகள் அந்த இடத்தில் ஏற்கெனவே உள்ள எழுத்துகளை நீக்கிவிடும். இப்போது புழக்கத்தில் உள்ள சொல் செயலித் தொகுப்புகளில் பெரும்பாலும் உட்செருகு பாங்கே (Insert Mode) இயல்பானதாய் உள்ளது. தேவையெனில் மேலெழுது பாங்காக மாற்றியமைத்துக் கொள்ளலாம்.