பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

post office protocol

353

pour



நிர்வாகிக்கு சென்று சேர்ந்துவிடும். (எ-டு) postmaster @ yahoo.co.in. 2. மின்னஞ்சல் அனுப்புதல்/பெறுதல் பராமரித்தலுக்கான ஒரு மென்பொருள். நூறு சதவிகிதம் ஜாவா மொழியிலேயே உருவாக்கப்பட்டது.

post office protocol : அஞ்சல் நிலைய நெறிமுறை : இணையத்திலுள்ள அஞ்சல் வழங்கனுக்கான நெறிமுறை. மின்னஞ்சலைப் பெற்று சேமித்து வைக்கிறது. முகவரி தாரருக்கு அனுப்பிவைக்கிறது. வழங்கனில் பிணைத்துக்கொள்ளும் கிளையன் கணினியில் அஞ்சலைப் பதிவிறக்கம் செய்யலாம். பதிவேற்றமும் செய்ய முடியும்.

post-processor : பின்செயலி : முதலில் வேறொரு செயலியினால் கையாளப்பட்ட தகவல்களின்மீது செயல்படக்கூடிய தொடுப்பி (linker) போன்ற ஒரு மென்பொருள் நிரல் அல்லது ஒரு சாதனம்.

PostScript : போஸ்ட்ஸ்கிரிப்ட் (பின் குறிப்பு) : அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பக்க-விவரிப்பு மொழி. நெகிழ்வுமிக்க எழுத்துரு வசதிகளும் உயர்தர வரைகலை வசதிகளும் உடையது. உலகறிந்த பக்க-விவரிப்பு மொழியான போஸ்ஸ்கிரிப்ட், பக்க உருவரைக்கும், எழுத்துருக்களை ஏற்றி வடிவமைக்கவும் ஆங்கிலம் ஒத்த எளிய கட்டளைகளைக் கொண்டது. அடோப் சிஸ்டம்ஸ் டிஸ்பிளே போஸ்ட்ஸ்கிரிப்ட் என்னும் மொழியையும் வழங்குகிறது. டிஸ்பிளே போஸ்ட்ஸ்கிரிப்ட் முற்ற முழுக்க விஸிவிக் (WYSIWYG-What You See Is What You Get) வசதியை வழங்குகிறது. திரையில் பார்வையிடவும் அப்படியே அச்சிடவும் இவ்விரண்டு மொழிகளும் இணைந்து பயன்தருகின்றன.

PostScript font : போஸ்ட்ஸ்கிரிப்ட் எழுத்துரு : போஸ்ட் ஸ்கிரிப்ட் பக்க-விவரிப்பு மொழியில் வரையறுக்கப்பட்டுள்ள ஒர் எழுத்துரு. போஸ்ட்ஸ்கிரிப்டுக்கு ஒத்தியல்பான அச்சுப்பொறியில் அச்சிடுவதற்கென உருவாக்கப்பட்டது. போஸ்ட் ஸ்கிரிப்ட் எழுத் துருக்கள் பிட்மேப் எழுத்துருக்களிலிருந்து மாறுபட்டவை. நளினம், தெளிவு உயர்தரமானவை. அச்சுக்கலைத் துறையில் நிலை பெற்றுவிட்ட தரக் கட்டுப்பாடுகளுக்கு முற்றிலும் இசைந்தவை.

PostScript printer: போஸ்ட்ஸ்கிரிப்ட் அச்சுப்பொறி : போஸ்ட்ஸ்கிரிப்ட ஆவணங்களை அச்சிடுவதற்கான அச்சுப் பொறி.

posture : நிலைப்பாடு.

POTS : பாட்ஸ் : மிகப் பழைய தொலைபேசி சேவை என்று பொருள்படும் Plain Old Telephone Service என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அடிப்படையிலான எண்சுழற்றுத் தொலைபேசி இணைப்புகளிலிருந்து பொது இணைப்பகப் பிணையத்துடன் தொடர்பு ஏற்படுத்தும் முறையில் அமைந்தது. கூடுதல் வசதிகள், செயல்பாடுகள் எதுவும் இல்லாதது. ஒரு பாட்ஸ் இணைப்பு என்பது, மேசை மீதுள்ள ஒரு சாதாரண தொலைபேசிக் கருவியுடனான இணைப்பைக் குறிக்கிறது.

pour : ஊற்று : ஒரு கோப்பினையோ அல்லது ஒரு நிரலின் வெளிப்பாட்டையோ இன்னொரு கோப்புக்கு அனுப்பிவைத்தல் அல்லது