பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

programme, linear

365

programmatic interface


 பொதுவாக தாளில் அச்சிடப்பட்ட நிரல் வரைவைக் குறிக்கும். சில மொழிமாற்றிகள் (compilers) நிரல் வரைவினை வரி எண்கள், குறுக்கு மேற்குறிப்புகள் போன்றவற்றுடன் உருவாக்கித் தரும்.

programme, linear : நேரியல் நிரல்.

programme logic : நிரல் தருக்கம் : ஒரு நிரலின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்புக்குப் பின்னாலுள்ள தருக்கம் - எப்படிச் செயல்பட வேண்டும் என்பதும் அப்படிச் செயல்படுவதற்கான காரணங்களும்.

programme, maintenance : நிரல் பாரமரிப்பு.

programme, mircro : நுண்நிரல்.

programme, object : இலக்கு நிரல்.

programme segment: நிரல் துண்டம்.

programme, segmented : துண்டமாக்கிய நிரல்.

programme, service : பணிநிரல்.

programme, source : மூலநிரல்.

programme stack : நிரல் அடுக்கை.

programme, stop : நிரல் நிறுத்தம்.

programme storage : நிரல் சேமிப்பு.

programme, supervisory : மேற்பார்வை நிரல்.

programme switch :நிரல்நிலைமாற்றி.

programme, test : சோதனை நிரல்.

programme testing: நிரல் சோதனை.

programme, utility : பயன்கூறு நிரல்.

programmable : நிரல்படு; நிரலாக்கத் தகு : ஒரு பணியை அல்லது ஒரு செயல்பாட்டை நிறைவேற்ற, ஆணைகளை ஏற்றுச் செயல்படும் நிலை. நிரலாக்கத் தகுநிலையில் இருப்பது என்பது கணினியின் பண்புக் கூறுகளில் ஒன்று.

programmable interrupt controller : நிரல்படு குறுக்கீட்டுக் கட்டுப்படுத்தி: குறுக்கீட்டுக் கோரிக்கைகளை (IRQs) கையாளும் இன்டெல் சிப்பு. அதிக அளவாக 15 ஐஆர்கியூக்களை கையாளக்கூடிய இரண்டு நிரல்படு குறுக்கீட்டுக் கட்டுப்படுத்திகள் ஐபிஎம் ஏடீ கணினிகளில் பயன்படுத்தப்பட்டன. பின்னாளில் இவற்றுக்குப் பதிலாக மேம்பட்ட நிரல்படு குறுக்கீட்டு கட்டுப்படுத்தி (APIC)கள் பயன்படுத்தப்பட்டன. இவை பல்பணியாக்கத்தை ஏற்கின்றன.

programmable logic device: நிரல்படு தருக்க சாதனம் : தயாரிப்பாளர் நிரலாக்காமல் வாடிக்கையாளரே நிரல்படுத்தக்கூடிய தருக்க சிப்பு. ஒரு வாயில் கோவையைப் (gate array) போன்று தருக்க வாயில்களின் தொகுதியைக் கொண்டிருக்கும். வாயில் கோவையைப் போன்று தயாரிப்பு நிலையிலேயே நிரலாக்கம் செய்து முடிக்கப்படவேண்டிய தேவையில்லை.

programmable memory : நிரல்படு நினைவகம்.

programmable communication interface : நிரல்படு தகவல் தொடர்பு இடைமுகம்.

programmable function key :நிரல்படு பணிவிசை.

programmatic interface : நிரல்நிலை இடைமுகம் : 1. பயனாளரின் கட்டளைகளை அல்லது ஒரு தனிச் சிறப்பான நிரலாக்க மொழியின்