பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

programmer

366

project management


 அடிப்படையில் அமைந்துள்ள பயனாளர் இடைமுகம். வரைகலைப் பயனாளர் இடைமுகத்துக்கு மாறானது. யூனிக்ஸ், டாஸ் போன்ற இயக்க முறைமைகள் இத்தகைய இடைமுகத்தைக் கொண்டுள்ளன. ஆப்பிள் மெக்கின்டோஷ் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் ஆகியவை வரைகலைப் பயனாளர் இடை முகத்தைக் கொண்டுள்ளன. காண்க: command line interface, graphical user interface, iconic interface. 2.நிரலர் ஒருவர் ஒரு பயன்பாட்டு மென் பொருளை உருவாக்கும்போது அவருக்கு இயக்க முறைமை வழங்கும் செயல்கூறுகளின் தொகுதி.

programmer : நிரலர்; செயல் வரைவாளர்.

programming environment : நிரலாக்கச் சூழல்.

programming, structured : ஆணைத் தொடர் கட்டமைப்பு நிரலாக்கம்.

programmers switch : நிரலர் விசை; நிரலர் நிலைமாற்றி ஆப்பிள் : மெக்கின்டோஷ் கணினிகளில் இருக்கும் இணைப் பொத்தான்கள். கணினியை மீட்டியக்கவும் (reboot), இயக்க முறைமையின் அடிநிலைச் செயல்பாட்டில் கட்டளைவரி இடைமுகத்துக்கு மாறவும் இந்தப் பொத்தான்கள் பயன்படுகின்றன. தொடக்கக் காலங்களில் மென் பொருளை பரிசோதிக்கும் நிரலர் களுக்கே இத்தகைய செயல்பாடுகள் தேவைப்பட்டன. எனவே மெக்கின்டோஷின் தொடக்க மாதிரியங்களில் கணினிப் பெட்டியின் உள்ளே இந்தப் பொத்தான்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பிற்காலக் கணினிகளில் அவை வெளிப்படையாகப்பட்டன. மீட்டியக்கு பொத்தான் இடப்புறம் திரும்பிய முக்கோணக்குறியாலும் மற்றது ஒரு வட்டக்குறியாலும் குறிக்கப்பட்டிருக்கும்.

prgrammes : நிரல்கள்.

project : திட்டப் பணி; செயல்திட்டம்; முன்னிறுத்து : 1. ஒரு குறிப்பிட்ட பணியை கணினி மயபப்டுத்துவதற்கான திட்ட வரைவு. 2. தரவுத் தள மேலாண்மையில் உறவுநிலைச் செயலாக்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்குறி. கொடுக்கப்பட்ட அட்டவணையிலிருந்து குறிப்பிட்ட பண்புக்கூறுகளை (நெடுக்கைகள்) மட்டும் எடுத்து புதிதாக ஓர் அட்டவணையை உருவாக்கித் தரும்.

Project Gutenberg : கட்டன்பெர்க் திட்டப்பணி : இணையத்தில் பொதுக்களத்தில் பல்வேறு புத்தகங்கள் கிடைக்கும்படி செய்யும் திட்டப்பணி. இந்தப் புத்தகங்களுக்கான கோப்புகள் கூடுமானவரை அதிகமான மக்கள் அணுகும் வகையில் வெளிப்படையான ஆஸ்கி எழுத்து வடிவில் இருக்கும். இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தினர் இத்திட்டப் பணியை உருவாக்கியுள்ளனர். இத் திட்டப் பணியின் எஃப்டீபீ தள முகவரி : ftp://mrcnext.cso.uinc.edu. இதன் வலைப் பக்க முகவரி : http:// www.promo.net/pg/.

project life cycle : திட்டப்பணி செயல்படுகாலச் சுழற்சி : ஒரு திட்டப்பணியின் தொடக்கம் முதல் இறுதிவரையுள்ள, முன்திட்டமிடப்பட்ட பல்வேறு கட்டப் பணிகளின் வரிசைமுறைத் தொகுதி.

project management :திட்டப்பணி மேலாண்மை : ஒரு குறிப்பிட்ட