பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rate,clock

376

README


மூலம் சேமிக்கப்பட்டுக் கையாளப் படக்கூடிய, படப்புள்ளித் தோரணிகளால் உருவாக்கப்படும் அதே மாதிரியான படிமங்கள்) மாற்றியமைத்தல்,

rate, clock : கடிகார வீதம்.

rate, keying-error: விசைப்பிழை வீதம்,

rate, read : படிப்பு வீதம்.

rate, utilization : பயன்படுத்து வீதம்,

rational number : பின்ன எண்.

raw mode : கச்சாப் பாங்கு: செப்ப மற்ற பாங்கு : எழுத்து அடிப்படையிலான ஒரு சாதனத்தை யூனிக்ஸ் மற்றும் எம்எஸ்-டாஸ் இயக்க முறைமைகள் நோக்கும் முறை. அச் சாதனத்தின் அடையாளக் குறி செப்ப மற்ற பாங்கு எனத் தெரியவரின், இயக்க முறைமை உள்ளீட்டு எழுத்துக் குறிகளை வடிகட்டாது. நகர்த்தி திரும்பத் (carriage return), கோப்பிறுதிக் குறியீடுகள், வரியூட்டம் (line feed) மற்றும் தத்தல் குறியீடுகள் (tabs) போன்ற குறியீடுகளுக்கு இயக்க முறைமை, சிறப்புவகைக் கவனிப்பு எதுவும் தருவதில்லை.

ray tracing : கதிர் படியெடுப்பு : உயர் தரக் கணினி வரைகலையை உருவாக்கும் நுட்பம்மிக்க சிக்கலான வழிமுறை. ஒரு வரையறுக்கப்பட்ட ஒளிமூலத்திலிருந்து ஒரு படிமத்தின் மீது ஒற்றைக் கதிரைச் செலுத்தி அது பிரதிபலிக்கும்போது எவ்வாறு மாற்றமடைகிறது என்பதைக் கருத்தில் கொண்டு படிமத்தின் ஒவ்வொரு படப்புள்ளியின் (pixel) நிறம், அடர்வு ஆகியவை கணக்கிடப்படுகின்றன. இதன் செயலாக்கத்திறன் அடிப்படையில் இம்முறை மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு கதிரின் ஒளிவிலகல், ஒளிச்சிதறல், ஒளி உறிஞ்சல் ஆகியவற்றையும் படக் கூறுகளின் ஒளிர்மை, மறைப் பின்மை மற்றும் பிரதிபலிக்கும் தன்மை இவற்றையும், பார்வையாளர், ஒளிமூலம் இவற்றின் இட நிலை ஆகியவற்றையும் கணினி கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

ray tube, cathode :எதிர்மின் கதிர்க்குழாய்.

ray tube store, cathode : எதிர்மின் கதிர்க்குழாய் சேமிப்பு.

RCA connector: ஆர்சிஏ இணைப்பி: கலப்பொலிக் (stereo) கருவி அல்லது கலப்பு ஒளிக்காட்சித் திரையகம், கணினியின் ஒளிக்காட்சித் தகவி இவை போன்ற கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சிக் கருவிகளை இணைக்கப் பயன்படுத்தப்படும் இணைப்பி.

README :என்னைப்படி: ரீடுமீ: ஒரு மென்பொருளின் ஆவணமாக்கத்தில் சொல்லப்படாத, பயனாளருக்குத் தேவையான அல்லது பயனாளர் பார்த்து விவரம் பெறக்கூடிய தகவல்கள் அடங்கிய ஒரு கோப்பு. பெரும்பாலும் ரீடுt (Readme) கோப்பில் தகவல்கள் நேரடி உரை Guto coau Gu (plain text format) வட்டில் எழுதப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட மென்பொருளில்