பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



removable mass storage

387

repository



அணுகக்கூடிய கணினி அல்லது கணினிப் பிணையம்.

removable mass storage : அகற்று மொத்தச் சேமிப்பகம்.

remove : அகற்று; நீக்கு.

remove all : அனைத்தும் அகற்று.

remove all arrows : அனைத்து அம்புக்குறிகள் நீக்கு. எம்எஸ் எக்செஸில் உள்ள ஒரு கட்டளை

remove filter : வடிகட்டி அகற்று. எம் எஸ் அக்செஸில் உள்ள ஒரு கட்டளை.

rename : பெயர்மாற்று; மாற்று பெயர் : பெரும்பாலான கோப்பு முறை மைகளில் ஒரு கோப்புக்கு மாற்றுப் பெயர் கொடுப்பதற்கான கட்டளை.

rename column : நெடுக்கைப் பெயர் மாற்று.

reorganize : மீள் ஒழுங்கமை .

repeat : திரும்பச்செய் : சற்றுமுன் செய்த பணியை மீண்டும் செய் விக்கப் பல்வேறு பயன்பாட்டு மென் பொருள்களில் உள்ள கட்டளை.

repetition instruction : திரும்பச் செய் ஆணை .

repetitive strain injury : தொடர்பணி மிகையுழைப்பு ஊறு : கணினி விசைப்பலகையில் தொடர்ந்து பணி புரிவதால், கணினித் திரையைத் தொடர்ந்து உற்றுநோக்குவதால் சில வகை நோய்கள் வர வாய்ப்புண்டு. மணிக்கட்டுக்கு துன்பம் நேரா வண்ணம் விசைப்பலகை அமைப்பு இருக்க வேண்டும். கண்ணுக்கு அவ் வப்போது ஓய்வு தரவேண்டும். கண் கண்ணாடி அல்லது திரைக்குக் கூசொளி வடிகட்டி போன்றவை பயன்படுத்த வேண்டும்.

replace : பதிலீடு; மாற்றீடு : ஒரு குறிப்பிட்ட விவரத்தை வேறொன் றால் பதிலீடு செய்தல். பொதுவாக மாற்றவேண்டிய விவரத்தைத் தேடிக் கண்டறிந்து, பின், அதனை மாற்றி யமைப்பர். பெரும்பாலான சொல் செயலித் தொகுப்புகளில் குறிப் பிட்ட சொல்லை/சொல்தொடரைக் கண்டறிந்து புதியதென்றால் மாற்றி யமைக்கும் “கண்டறிந்து மாற்று" (Find and Replace) என்னும் வசதி உள்ளது. இருக்கும் விவரத்தையும் புதிய விவரத்தையும் குறிப்பிட வேண்டும். எழுத்து வடிவம் (Upper/ Lower case) எப்படியிருப்பினும் மாற்றச் செய்யவும் வசதி உண்டு,

replay : மறு இயக்கம்; மீண்டும் இயக்கு.

reply to all : அனைவருக்கும் பதிலிடு; யாவர்க்கும் பதில்,

replication : படியாக்கம் : ஒரு பகிர்ந் தமை தரவுத் தள மேலாண்மை அமைப்பில், ஒரு தரவுத் தளத்தை அல்லது அதன் ஒரு பகுதியை பிணையத்தின் பிற பகுதியிலுள்ள கணினியிலும் நகலெடுத்து வைத் தல். பகிர்ந்தமை தரவுத் தள அமைப்புகள் ஒத்திசைவோடு விளங்க படியாக்கம் பயன்படுகிறது.

report layout : அறிக்கை உருவரை.

report manager : அறிக்கை மேலாளர்.

report, error : பிழை அறிக்கை .

reports : அறிக்கைகள்.

repository : தொகுபதிவகம் : 1. ஒரு கணிப்பணி அமைப்பைப் பற்றிய அனைத்துத் தகவல்களின் தொகுப்பு. 2. ஒரு தரவுத் தளத்தின் தரவு அகராதியை உட்பொதியாய்க் கொண்டுள்ள மேற்பொதி.