பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rlogin

392

role-playing game


அடிப்படையாகக் கொண்டது ரிஸ்க் கட்டுமானம்.

           மிக எளிய ஆணைகளைப் பொறுத்தமட்டில் ரிஸ்க் நுண்செயலிகளைக் காட்டிலும் சிஸ்க் (CISCComplex Instruction Set Computing) நுண்செயலிகள் மிகவேகமாய் நிறைவேற்றுகின்றன. ஆனால்,மிகவும் சிக்கலான ஆணைகளைப் பொறுத்தமட்டில் ரிஸ்க் செயலிகளைவிட வேகத்தில் குறைந்தவையே காரணம், சிஸ்க் செயலிகள் சிக்கலான செயல்பாட்டிற்கும் தனித்தனி ஆணைகளைக் கொண்டுள்ளன. ரிஸ்க் செயலிகள் பல ஆணைகளின் தொகுப்பாக அவற்றை நிறைவேற்ற வேண்டியுள்ளது. சன் மைக்ரோ சிஸ்டமஸ் நிறுவனத்தில் ஸ்பார்க் செயலி,மோட்டோரோலாவின் 88,000 இன்டெல்லின் ஐ 860, ஆப்பிள், ஐபிஎம் மோட்டோரோலா ஆகியவற்றின் பவர்பீசி, ரிஸ்க் வகையைச் சேர்ந்தவை. 

rlogin : ஆர்லாகின் : ஒரு பிணையக் கணினியில் நுழைவதற்குப் பயன்படும் ஒரு நெறிமுறை. இம்முறையில் பயனாளரின் புகுபதிகைப் பெயரை பயனாளரின் கணினி தானாகவே தந்துவிடும்.

.ro : ஆர்ஓ : ஒர் இணையதள முகவரி ருமேனியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

robopost : பொறிவழி வெளியீடு : ஒரு தானியங்கு நிரல் மூலமாக, செய்திக் குழுக்களுக்குக் கட்டுரைகள் அனுப்பிவைத்தல்.

robot : எந்திரன்:மனிதர்களின் மேற்பார்வையின்றி, சுற்றுச்சூழலை உணர்ந்து, உள்ளீட்டுக்கேற்றவாறு சுற்றுச் சூழலை ஓரளவுக்கு துண்ணறிவோடு மாற்றும் திறன் பெற்ற ஒரு பொறி. பெரும்பாலும், மனித அசைவுகளையொத்த செயல்பாடுடைய எந்திரன்களே வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் உருவத்தில் அவை மனிதர்களைப் போல படைக்கப்படுவதில்லை. வாகனம் மற்றும் கணினி உற்பத்தி சாலைகளில் எந்திரன்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

robust : எதிர்கொள்திறன்; தாக்குப் பிடிக்கும் திறன் : எதிர்பாராத சூழ்நிலைகளிலும் இயங்கக்கூடிய அல்லது இயக்கத்தைத் தொடரக்கூடிய திறன்.

ROFL : ஆர்ஓஎஃப்எல்: ரோஃபல் : விழுந்து விழுந்து சிரித்தல் எனப் பொருள்படும் Rolling on the floor, laughing என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பெரும்பாலும் செய்திக் குழுக்களில் மற்றும் நிகழ்நிலைக் கலந்துரையாடல்களில், ஒரு நகைச்சுவைத் துணுக்கை அல்லது நகைப்பேற்படுத்தும் சூழ் நிலையை ரசித்துப் பாராட்டுவதைத் தெரிவிக்கப் பயன்படும் சொல்.

role-playing game : பாத்திரமேற்று நடிக்கும் விளையாட்டு : நடப்பு வாழ்க்கையில் சந்திக்கும் பாத்திரங்களை ஏற்று ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நடித்துக் காட்டுவது. பெரும்பாலும் மேலாண்மைப் பயிற்சியகங்களில் பயிற்சியாளர்களுக்கு இத்தகைய பயிற்சி அளிக்கப்படுவதுண்டு. ஒர் அதிகாரியிடம் புகார் தர வருகின்ற வாடிக்கையாளர் ஒருவர் எப்படி நடந்து கொள்வார், அதிகாரி அவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை