பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

application level

38

Archie


இரு கணினிகளுக்கிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றத்தின் தொழில்நுட்ப நெறிமுறைகளை பன்னாட்டுத் தரநிர்ணய அமைப்பு (International Standards Organisation-ISO) வகுத்துத் தந்துள்ளது. சமிக்கைப் பரிமாற்றங்களுக்குரிய ஒஎஸ்ஐ மாதிரி(OSI Model-Open System Inter connection Model) என்பது முக்கியமான ஒன்று. ஏழு அடுக்குகளைக் கொண்டது. அவற்றுள் பயன்பாட்டு அடுக்கும் ஒன்றாகும். இந்த அடுக்கில்தான் ஒரு தொலைதூரக் கணினியுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும், கோப்புப் பரிமாற்றம் செய்வதற்குமான சமிக்கைகள் அடங்கியுள்ளன. பயனாளருக்கு மிகவும் பயனுள்ள பணியைச் செய்வது இந்த அடுக்குத்தான். ஏழு அடுக்குகளில் ஏனைய கீழடுக்குகள், அனுப்பும்/பெறும் கணினிகளுக் கிடையே தகவல் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றன.

application level : பயன்பாட்டு நிலை.

application mathematics : பயன்பாட்டுக் கணிதம்.

application minimise button : பயன்பாட்டைச் சிறிதாக்கு பொத்தான்.

application portability profile (APP) : பயன்பாட்டு கையாண்மை விவரக் குறிப்பு.

application programming interface : பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்.

application restone button : பயன்பாட்டு மீட்புப் பொத்தான்.

application shortcut key : பயன்பாட்டு சுருக்குவழி விசை : பயன் பாட்டுத் தொகுப்புகளில் பல்வேறு பணிகளையும் பட்டி விருப்பத் தேர்வுகளின்(menu options)மூலமே நிறைவேற்றிக் கொள்கிறோம். வழக்கமாகத் தொடர்ச்சியான பல்வேறு பட்டித் தேர்வுகளின் மூலம் நிறைவேற்ற வேண்டிய ஒரு பணியை ஒன்றிரண்டு விசைகளை ஒருசேர இயக்குவதன் மூலம் நிறை வேற்றிக்கொள்ள முடியும். அத் தகைய விசை அல்லது விசைகள் சுருக்குவழி விசை என்று அழைக் கப்படுகிறது. இம்முறையை விசைப் பலகைச் சுருக்குவழி (keyboard shortcut)என்றும் கூறுவர்.

application specific integrated circuit (ASIC) : பயன்பாடு சார்ந்த ஒருங்கிணைந்த மின்சுற்று.

application window : பயன்பாட்டுச்சாளரம், பயன்பாட்டுப் பலகணி.

application wizard : பயன்பாட்டு வழிகாட்டி

apply : செயலாக்கு.

apply filter : வடிகட்டி பயன்படுத்து.

applying : பயன்படுத்துதல்.

appointment order : பணி ஆணை .

Archie : ஆர்க்கி : பெயர்கொடா கோப்புப் பரிமாற்ற நெறிமுறையின் மூலம் இலவச ஆவணக் காப்பகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்புகளைத் தேடிக் கண்டறியும் இணையப் பயன்பாடு. மான்ட்ரீல் நகரின் மெக்கில் (McGill) பல்கலைக் கழகத்திலுள்ள தலைமை ஆர்க்கி வழங்கன் கணினி, தன்னுடன் இணைக்கப்பட்ட கோப்புப் பரிமாற்ற நெறிமுறை அடிப்படையிலான அனைத்து வழங்கன் கணினிகளிலிருந்தும் கோப்புப் பட்டியல் களைப் பதிவிறக்கம் செய்து, அவற்றை ஒன்றிணைத்து ஒரே பட்டியலாக்கி, அப்பட்டியலை அனைத்து ஆர்க்கி வழங்கன் கணினி