பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

serialize

407

server error


அச்சுப்பொறி போன்ற புறச்சாதனங்களுக்கும் பயன்படுகின்றன.

serialize : நேரியல்படுத்து : பைட் பைட்டாக அனுப்பப்படும் இணைநிலை தகவல் பரிமாற்றத்தை, துண்மி துண்மியாக (பிட் பிட்டாக) அனுப்பப்படும் நேரியல் முறையாக மாற்றியமைத்தல்.

serialkeys : நேரியல் விசைகள் : விண்டோஸ் 95ல் இருக்கும் ஒரு பண்புக் கூறு. தகவல் தொடர்பு, இடைமுகச் சாதனங்களைப் பொறுத்தமட்டில் விசையழுத்தங்களும், சுட்டிச் சமிக்கைகளும் கணினியின் நேரியல் துறை (serial port) வழியாகவே ஏற்றுக் கொள்ளப் படுகின்றன.

serial machine : நேரியல் பொறி.

serial mouse : நேரியல் சுட்டி : கணினியின் வழக்கமான நேரியல் துறையில் இணைக்கப்படும் ஒரு சுட்டு சாதனம்.

serial port adapter: நேரியல் துறைத் தகவி : நேரியல் துறை அமைந்துள்ள, அல்லது தொடர்நிலைத் துறையை இன்னொன்றாக மாற்றியமைக்கின்ற ஒர் இடைமுக அட்டை அல்லது சாதனம்.

serial transfer : நேரியல் பரிமாற்றம்.

serializability: நேரியலாக்கு இயலுமை.

series : தொடர்கள்.

series circuit : வரிசை மின்சுற்று : இரண்டு அல்லது மேற்பட்ட உள்ளுறுப்புகள் வரிசையாகத் தொடுக்கப்பட்ட ஒரு மின்சுற்று. தொடர் மின்சுற்றில் ஒவ்வொரு உள்ளுறுப்பு வழியாகவும் மின்னோட்டம் (current) பாயும். ஆனால் மின்னழுத்தம் (voltage) உள்ளுறுப்புகளிடையே பகிர்ந்து கொள்ளப்படும்.

server-based application : வழங்கன்-சார்ந்த பயன்பாடு : ஒரு பிணையத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் ஒரு நிரல். பிணைய வழங்கனில் சேமிக்கப்பட்டிருக்கும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிளையன்கள் அந்நிரலைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

server cluster : வழங்கன் கொத்து : ஒருங்கிணைந்து ஒற்றை அமைப்பாகச் செயல்படும் தனித் தனிக் கணினிகளின் குழுமம். கிளையனைப் பொறுத்தவரை வழங்கன் கொத்து ஒர் ஒற்றை வழங்கன் போலவே தோற்றமளிக்கும்.

server error : வழங்கன் பிழை : பயனாளர் அல்லது கிளையன் கணினியின் பிழையாக இல்லாமல், வழங்கன் கணினியில் ஏற்படும் பிழை காரணமாக, ஹெச்டீடீபீ வழியாகக் கேட்கப்பட்ட ஒரு தகவலை நிறைவேற்றமுடியாமல் இருக்கும் நிலை. வழங்கன் பிழைகள், 5-ல் தொடங்கும் ஹெச்டீடீபீ-யின் பிழைக் குறியீட்டால் உணர்த்தப்படும்.

server push-pull : வழங்கன் தள்ளு-இழு : கிளையன்/வழங்கன் இணைந்த நுட்பங்கள் தனித்தனியாக வழங்கன் தள்ளல், கிளையன் இழுவை என்று வழங்கப்படுகின்றன. வழங்கன் தள்ளலில், வழங்கன், தகவலை கிளையனுக்குத் தள்ளிவிடுகிறது. ஆனால் தகவல் இணைப்பு திறந்தநிலையிலேயே உள்ளது. இதன் காரணமாய் தேவையான அளவுக்குத் தகவலை உலாவிக்குத் தொடர்ந்து அனுப்பிவைக்க வழங்கனுக்குச் சாத்தியமாகிறது. கிளையன்