பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

array and sringes

41

ascending order


array and sringes : கோவை மற்றும் சரம்.

artibutes : பண்புக் கூறுகள்.

array bound : கோவை வரம்பு.

array dimension : கோவைப்பரிமாணம்.

arrival rate : வருகை வீதம்.

arrow keys , அம்புக்குறி விசைகள் : கணினித் திரையில் தோன்றும் சுட்டுக் குறியை அல்லது விருப்பத் தேர்வுப் பட்டியல்களில் தேர்வுக் குறியை மேல்கீழாக, பக்கவாட்டில் நகர்த்துவதற்குப் பயன்படக் கூடிய, மேல், கீழ், வலம், இடம் நோக்கிய அம்புக்குறி இடப்பட்ட விசைகள்.

article : கட்டுரை: செய்திக் குறிப்பு : இணையத்தில் செய்திக்குழுவில் (newsgroup) வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பு. கடிதம் என்றும் கூறப்படுவதுண்டு.

article selector : கட்டுரை தேர்வி .

artificial intelligence (AI) : செயற்கை நுண்ணறிவு.

artificial life : செயற்கை உயிர் : வாழும் உயிரினங்களின் நடத்தையில் சில கூறுகளை போலச் செய்யும் கணினி அமைப்புகள் பற்றிய ஆய்வு. ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்ற எழுதப்பட்ட நிரல், அதன் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு, தகவமைத்தல், தப்பிப் பிழைத்தல், இனம் பெருக்குதல் போன்ற மனிதப் பண்புகளின் மொத்த நடவடிக்கைகளையும் மேற் கொள்ளுமாறு செய்ய முடியும். இந்த நிரல்கள் ஒரு சிக்கலுக்கு மிகச் சரியான தீர்வு கிடைக்கும்வரை தம்மைத் தாமே தொடர்ந்து மாற்றிக் கொள்கின்றன. இத்தகைய நிரல்களை இயக்கும் கணினி முறைமைகளை செயற்கை உயிர் என்கின்றனர்.

artificial network : செயற்கைப்பிணையம்.

artificial neural network : செயற்கை நரம்புசார் பிணையம் : மனிதனின் மூளையும் நரம்பு மண்டலமும் ஒரு பிணையம் (network) போலவே செயல்படுகின்றன. மனித உடலில் செயல்படும் இந்தப் பிணையத்தின் தொழில் நுட்ப அடிப்படையில் ஒரு கணினிப் பிணையத்தை உருவாக்க ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மனித நரம்பு மண்டலப் பிணையக் கருத்தமைவின் அடிப்படையில் கணினியில் ஒரு குறிப்பிட்ட பணிக்கான மென்பொருளைச் செயல்படுத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவு அமைப்பினை நரம்பு சார்பிணையம் என்றழைக்கலாம்.

ascending : ஏறுமுகமாய் வரிசைப் படுத்தல் : பட்டியல் உறுப்புகளை ஏறுமுக வரிசையில் வரிசைப் படுத்தும் முறை.

ascending order : ஏறுமுக வரிசை: ஏறுவரிசை என்பது ஒரு பட்டிய லிலுள்ள உறுப்புகளை சிறியதில் தொடங்கி பெரியதில் முடியுமாறு வரிசைப்படுத்துவது. எடுத்துக்காட்டாக 1 முதல் 10 வரை, அ முதல் ஒள வரை அடுக்குவது. ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுத் தொகுப்பில் இத்தகைய அகர வரிசையை முடிவு செய்வது மிகவும் சிக்கலானது. எடுத்துக்காட்டாக, எண்களை எழுத்துகளுக்கு முன்னால் வைப்பதா பின்னால் வைப்பதா,இடவெளிகளை (spaces) எங்கு சேர்ப்பது? ஆங்கிலத்தைப் பொறுத்தவரை பெரிய எழுத்து,