பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ASCII character set

42

associate


சிறிய எழுத்துச் சிக்கல் உண்டு. ஆஸ்க்கி அட்டவணையின் எண் மதிப்பு அடிப்படையில், ஆங்கிலச் சிறிய எழுத்து, பெரிய எழுத்தைவிட அதிக மதிப்புக் கொண்டது.

ASCII character set : ஆஸ்க்கி எழுத்துத் தொகுதி : இரும இலக்கங்களில் ஏழு துண்மி (பிட்) குறிப்பிடப்படுகின்ற ஆஸ்கிக் குறியீடுகள். 0 முதல் 127வரை அவற்றின் ஆஸ்க்கி மதிப்பு இருக்கும். பெரும்பாலான கணினிகளில் எட்டு துண்மி (பிட்)களால் ஆன விரிவாக்கப்பட்ட ஆஸ்கி குறியீடு பயன்படுத்தப்படுகிறது. அதில் கூடுதலாக 128 எழுத்துகளும் குறியீடுகளும் அடங்கியுள்ளன. பிறமொழி எழுத்துகள், வரைகலைக் குறியீடுகளைக் கொண்டுள்ளன.

ASCII file : ஆஸ்கிக் கோப்பு: ஆஸ்கி எழுத்து வடிவங்களில் உருவாக்கப்பட்ட ஆவணம். எழுத்துகள், எண்கள், நிறுத்தற்குறிகள், இடவெளிகள், புதுவரிக் குறியீடுகள். இவற்றைக் கொண்டிருக்கும். சில வேளைகளில் தத்தல் (Tab) இடவெளிகள் மற்றும் கோப்பிறுதிக் குறியையும் கொண்டிருக்கும். ஆனால் வடிவமைப்பு (formatting) விவரங்கள் எதையும் கொண்டிருக்காது. இத்தகைய கோப்பு, உரைக் கோப்பு (text file) எனவும், உரை மட்டுமுள்ள கோப்பு (text only file) எனவும் அழைக்கப்படுகிறது.

ASCII transfer : ஆஸ்கி அனுப்புகை : ஆஸ்கிப் பரிமாற்றம் : மின்னணுத் தகவல் பரிமாற்றத்தில் ஒர் உரைக் கோப்பினை அனுப்புவதற்கு ஏற்ற படிவ முறை. இத்தகைய பரிமாற்ற முறையில் பிணையத்திற்கும், பிணையத்திலிருந்தும் தகவல் அனுப்பி வைக்க உலகப் பொதுவான குறியீட்டுத் தொகுதி அடிப்படையில் எழுத்து மாற்றம் செய்யப்படுகிறது.

ASCII sort order : ஆஸ்கி வரிசையாக்கம்.

ASCII string : ஆஸ்கி சரம்: சில நிரலாக்க மொழிகளில் குறிப்பிட்ட ஒர் எழுத்துடன் (NULL) முடியும் சரம். ஆஸ்கி மதிப்பு சுழி (ஜீரோ) யாக இருக்கும் எண்மி (பைட்), சர ஈற்று எழுத்தாகும்.

aspect - oriented programming : விவரண நோக்கு நிரலாக்கம்.

assembly programme : தொகுப்பு மொழி நிரல்; சில்லு மொழி நிரல்.

assign macro : குறு நிரல் குறித்தளி.

assigned number : குறித்தளித்த எண்.

assignment : குறித்தளித்தல்:மதிப்பிருத்தல்.

assignment operator : மதிப்பிருத்தும் செயற்குறி:மதிப்பிருத்தும் செய் முறைக்குறி; மதிப்பிருத்தும் இயக்கி : ஒரு மாறியில் (variable) அல்லது ஒரு தகவல் குழுவில்(data structure) ஒரு மதிப்பை இருத்தி வைக்கப் பயன்படும் செயற்குறி அல்லது குறியீடு. பெரும்பாலும் = என்னும் அடையாளம் இப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

assignment statement : குறித்தளித்தல் கூற்று

associate : உறவுபடுத்து: தொடர்புறுத்து : ஒரு கோப்பின் குறிப்பிட்ட வகைப்பெயர் (extension) ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுத் தொகுப்புடன் உறவுடையது என்று இயக்க முறைமைக்கு (operation system)அறிவித்தல். ஒரு கோப்பினைத் திறக்கும்போது,அக்கோப்பின்