பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tail frame

438

TAPI


தலையும் (switching) ஒருங்கிணைத்து சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கிய,ஒரு பல்லடுக்கு இணைய இணைப்பாக்கத் தொழில்நுட்பம்.

tail frame:வால் சட்டம்:

talk:டாக்,(பேசு; பேச்சு):ஒரு யூனிக்ஸ் கட்டளை.இணையத்தில் ஓர் ஒத்திசைவு அரட்டைக்கான கோரிக்கையை உருவாக்கும். talk என்னும் சொல்லைத் தொடர்ந்து இன்னொரு பயனாளரின் பெயரும் முகவரியும் தரப்பட வேண்டும்.

talker:டாக்கர்(பேச்சாளி):இணைய அடிப்படையிலான ஒத்திசைவுத் தகவல் தொடர்பு நுட்பம்.பெரும்பாலும் பல்பயனாளர் அரட்டைச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. வெவ்வேறு அறைகளில்,வெவ்வேறு கருத்துகளைப்பற்றி அரட்டையில் ஈடுபடுவதற்கென கட்டளைகள் உள்ளன.நிகழ்நேரத்தில் பயனாளர்கள் தமக்குள்ளே உரை வடிவில் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள முடியும்.

talk.newsgroups டாக்.நியூஸ் குரூப்ஸ்: டாக் படிநிலையிலுள்ள யூஸ்நெட் செய்திக்குழுக்கள். talk.என்னும் முன்னொட்டினைக் கொண்டிருக்கும். விவாத்துக்கிடமான தலைப்புகளில் வாதங்கள், கலந்துரையாடல்கள் நடைபெறும்.ஏழு யூஸ் நெட் செய்திக்குழு படிநிலைகளுள் ஒன்று.பிற ஆறு: comp.,misc.,news.,rec.,SCI.,SOC.

TANSTAAFL:டான்ஸ்டாஃபல்:இலவவசப் பகல்விருந்து என்பது போன்று எதுவுமில்லை என்று பொருள்படும் There ain't no such thing as a free lunch என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.இணையத்தில் மின்னஞ்சல் அரட்டை,அஞ்சல் பட்டியல்,செய்திக் குழுக்கள் மற்றும் பிற நிகழ்நிலை மன்றங்களில் பயன்படுத்தப்படும் சொல்.

tape control:நாடாக் கட்டுபாடு.

tape drive:நாடா இயக்கம்.

tape,magnetic:காந்த நாடா.

tape,paper:தாள் நாடா.

tape reader,paper:தாள் நாடா படிப்பி.

tape station:நாடா நிலையம்.

tape tree:நாடா மரம்: யூஸ்நெட் இசைச் செய்திக்குழுக்களிலும்,அஞ்சல் பட்டியல்களிலும் பயன்படுத்தப்படுகின்ற கேட்பொலி நாடா வினியோகத்துக்கான ஒரு வழிமுறை.இந்த முறையில்,பதிவு செய்யப்பட்ட ஒரு பாடல் பல்வேறு கிளைப் பயனாளர்களுக்கு அனுப்பப்படும். அவர்கள் அதனை பிற பயனாளர்களுக்கு அனுப்பி வைப்பர்.

tape varifier paper:தாள் நாடா சரிபார்ப்பி:

tape width:நாடா அகலம்.

TAPI:டேப்பி;டிஏபிஐ: தொலை பேசிப் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Telephony Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.விண்டோஸ் திறந்தநிலை முறைமைக் கட்டுமானத்தில் (WOSA - Windows Open Systems Architecture) 905 நிரலாக்க இடைமுகம்.விண்டோஸின் கிளையன் பயன்பாடுகள் ஒரு வழங்கனின் குரல்வழிச் சேவைகளை அணுகுவதற்கு உதவுகிறது. சொந்தக் கணினிகளுக்கும்,தொலைபேசிக் கருவிக்கும் இடையே ஊடு