பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tar

439

T-carrier


செயல்பாட்டை(interoperability)டேப்பி வழங்குகிறது.

.tar:.டார்:டார் நிரல் மூலம் உருவாக்கப்பட்ட இறுக்கப்படாத வடிவமைப்பில் உள்ள காப்பக கோப்பினை அடையாளங்காட்டும் வகைப்பெயர்.

tar1:டார்1: நாடாக் காப்பகம் (Tap Archive) என்பதன் சுருக்கம்.யூனிக்ஸில் உள்ள ஒரு பயன்கூறு.பயனாளர் விரும்பினால் பல்வேறு கோப்புகளை ஒன்றாகச் சேர்த்து ஒரே கோப்பாக வைத்துக்கொள்ள இது உதவுகிறது.அந்த ஒற்றைக் கோப்பு .tar என்னும் வகைப்பெயரைக் கொண்டிருக்கும்.PKZIP போல,tar கட்டளை கோப்புகளை இறுக்கிச் சுருக்குவதில்லை.எனவே tar கோப்புகளை gzip மூலம் இறுக்கிச் சுருக்க முடியும். இறுக்கிய கோப்புகள்.targz என்னும் வகைப்பெயரைக் கொண்டிருக்கும்.

tar2:டார்<sup<2:டார் பயன்கூறு மூலம் ஒரு கோப்புத் தொகுதியை ஒற்றைக் கோப்பாக மாற்றுதல்.

target code(or)object code:இலக்குக் குறிமுறை.

taskbar:பணிப்பட்டை: விண்டோஸ் 95/98/மீ/என்டி/2000 முறைமைகளில் கணினித் திரையின் அடிப்பாகத்தில் தோற்றமளிக்கும் வரைகலைக் கருவிப்பட்டை.இயக்கத்திலிருக்கும் பல்வேறு பயன்பாடுகளை சின்னமாக்கி பணிப்பட்டையில் வைத்துக்கொண்டு தேவையானதை மட்டும் செயல்படுத்தலாம். தொடங்கு (Start)பொத்தானும்,தேதி,நேரம் போன்ற விவரங்களும் இதில் உண்டு. விண்டோஸ் இயக்க முறைமையில் ஒரு பயன்பாடு இயங்கிக்கொண்டிருக்கும்போது அதற்குரிய ஒரு பொத்தான் பணிப்பட்டையில் தோற்றமளிக்கும். இவ்வாறு தோற்றமளிக்கும் பொத்தான்கள் மீது சொடுக்கி,தேவையான பயன்பாட்டில் பணிபுரியலாம்.

task dispatcher:பணிச்செலுத்தி.

task management:பணிமேலாண்மை.

taskbar options:பணிப்பட்டை விருப்பத் தேர்வுகள்.

task panel:பணிப்பொறுப்புச்சட்டம்; பணிச் சட்டம்.

tak queue:பணிவரிசை;பணிச்சாரை.

.tc:.டீசி ஓர் இணையதள முகவரி துர்க்ஸ்-கைக்கோஸ் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

T-carrier:டீ-சுமப்பி: ஒரு பொதுச் சுமப்பி வழங்குகின்ற தொலைதூர இலக்கமுறைத் தகவல் தொடர்புத் தடம்.இரு முனைகளிலுமுள்ள ஒன்றுசேர்ப்பிகள் பல்வேறு குரல் தடங்களை ஒன்றிணைத்து இலக்க முறைத் தரவுத் தாரைகளாய் (Digital Data stream) அனுப்பி வைக்கின்றன.பெறுமுனையில் குரல்தடங்கள் தனித்தனியே பிரிக்கப்படுகின்றன.1993ஆம் ஆண்டில் ஏடி&டீ நிறுவனம் டி-சுமப்பி சேவையை அறிமுகப் படுத்தியது.சுமந்து செல்லும் தட எண்ணிக்கையைப் பொறுத்து பல்வேறு நிலைகள் உள்ளன.டீ.1,டி2,டி3,டி4 ஆகியவை உண்டு.குரல்