பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

technical support

441

teraflops


யாளர் அனைவரும் நுட்பராகிவிட முடியாது.

technical support:தொழில்நுட்ப உதவி.

'technical test:தொழில்நுட்பச் சோதனை.

technology,information:தகவல்தொழில்நுட்பம்.

technolgoy lab:ஆய்வுக் கூடம்.

'technical interview:தொழில்நுட்ப நேர்காணல்.

technophile:தொழில்நுட்ப ஆர்வலர்: வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் உற்சாகத்துடன் ஆர்வம் செலுத்தும் ஒருவர்.

telco:டெல்கோ:தொலைபேசிக் குழுமம் எனப் பொருள்படும் Telephone Company என்பதன் சுருக்கச்சொல்.பொதுவாக,இச்சொல் இணையச் சேவைகளை வழங்கும் தொலைபேசிக் குழுமத்தைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது.

telecom:தொலைதொடர்பு.

telecopy:தொலைபடி;தொலை நகல்.

telehomecare:தொலையில்ல மருத்துவம்.

telephone:தொலைபேசி.

telephony device:தொலைபேசிச் சாதனம்: ஒலி சமிக்கைகளை மின்சார சமிக்கைகளாக மாற்றி வேறிடத்துக்கு அனுப்பி,பெறுமிடத்தில் மின்சாரச் சமிக்கைகளை ஒலியாக மாற்றியமைக்கும் சாதனம்.

telephone exchange:தொலைபேசிப் பரிமாற்றம் /இணைப்பகம்.

television:தொலைக்காட்சி.

televoting:தொலைநிலை வாக்களிப்பு.

telemedicine clinic:தொலைநிலை மருததுவமனை.

telnet1:டெல்நெட்1: டெல்நெட் நெறிமுறையை நடைமுறைப்படுத்துகின்ற கிளையன் நிரல்.

telnet2:டெல்நெட்2: டெல்நெட் நெறிமுறையைப் பயன்படுத்தி இணையத்தின் மூலமாகத் தொலைதூரக் கணினியை அணுகுதல்.

telnet3:டெல்நெட்3: ஓர் இணையப் பயனாளர் இணையத்தில் பிணைந்துள்ள ஒரு தொலைதூரக் கணினியில் நுழைந்து,கட்டளைகளை இயக்க வகைசெய்யும் நெறிமுறை.அக்கணினியுடன் நேரடியாக இணைக்கப்பட்ட,உரை அடிப்படையிலான ஒரு முனையம் போலவே செயல்பட முடியும்.டெல்நெட், டீசிபி/ஐபி நெறிமுறைக் குடும்பத்தில் ஓர் அங்கம்.

template wizzard:வார்ப்புரு வழிகாட்டி.

temporary password:தற்காலி நுழை சொல்.

teraflops:டெராஃபிளாப்ஸ்; மீத்திறன் கணினிகளின் வேகத்தை அளக்கும் அலகு.ஒரு வினாடியில் ஒரு டிரில்லியன் மிதவைப் புள்ளிக் கணக்கீடுகள் என்பதைக் குறிக்கும்.ஒரு வினாடியில் எத்தனை டெராஃபிளாப்ஸ் எண்ணிக்கையிலான கணக்கீடுகளை ஒரு கணினி செய்ய முடியும் என்பதைக் கணக்கிட்டு அதன் வேகம் மதிப்பிடப்படுகிறது.1 டிரில்லியன்-1000 பில்லியன் (1012).