பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

three-tier client/server

445

tiebreaker


பொருளை கணினியில் பாவித்தல்,x,y,z அச்சுகளில் அதன் பரிமாணங்கள் அமையும். பல்வேறு கோணங்களில் சுற்றித் திருப்பிப் பார்வையிட முடியும்.

three-tier client/server:மூன்றடுக்கு கிளையன்/வழங்கன்: மென்பொருள் அமைப்புகள் மூன்றடுக்குகளில் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு கிளையன்/வழங்கன் கட்டுமானம்.(1)பயனாளர் இடைமுக அடுக்கு.(2) வணிகத் தருக்க அடுக்கு,(3) தரவுத்தள அடுக்கு. ஒவ்வோர் அடுக்கும் ஒன்று அல்லது மேற்பட்ட உறுப்புகளைக் கொண்டிருக்கும்.எடுத்துக்காட்டாக, மேல்அடுக்கில் ஒன்று அல்லது பல பயனாளர் இடை முகங்கள் இருக்கலாம்.ஒவ்வொரு பயனாளர் இடைமுகமும் நடு அடுக்கிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாடுகளுடன் ஒரே நேரத்தில் தொடர்புகொள்ள முடியும்.நடு அடுக்கிலுள்ள பயன்பாடு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தரவுத் தளங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

throttle control:தடுப்பிதழ்க் கட்டுப்பாடு: கணினியில் விமானப் பாவிப்பி அல்லது விளையாட்டுகளில்,பாவிப்பு எந்திரப் பொறியின் சக்தியைக் கட்டுப்படுத்தப் பயனாளருக்கு உதவும் ஒரு சாதனம்.தடுக் கிதழ்,பெரும்பாலும் ஒரு விசைப்பிடி (Joystick) அல்லது ஒரு சுக்கான் {Rudder)விசையுடன் இணைந்து பயன்படுத்தப்படும்.

throw:எறி:சி++/ஜாவா/சி# மொழிகளிலுள்ள ஒரு கட்டளை.

thumbnail:விரல்நுனி; விரல்நகம்; குறுஞ்சின்னம்:ஒரு படிமத்தின் மிகச்சிறு வடிவம். படிமங்களை அல்லது பல பக்கங்களை வெகு விரைவாகப் பார்வையிடுமாறு மின்னணு வடிவில் அமைத்திருத்தல்.எடுத்துக்காட்டாக,வலைப் பக்கங்கள் பெரும்பாலும் படிமங்கள் அல்லது குறுஞ்சின்னங்களைப் பெற்றிருப்பதுண்டு. இணைய உலாவி,முழு அளவுப் படிமத்தை விட இக்குறுஞ்சின்னங்களை வெகு விரைவாகப் பதிவிறக்கம் செய்துவிடும்.இக்குறுஞ்சின்னங்களை சுட்டியால் சொடுக்கியதும் முழுப்படம் திரையில் விரியும்.

TIA:டீஐஏ: முன்கூட்டிய நன்றி என்று பொருள்படும் Thanks in Advance என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தில், ஒரு கோரிக்கையை முன் வைக்கும்போது, வழக்கமாகச் சொல்லப்படுவது.

tick:டிக்:1.ஒரு கடிகாரத் துடிப்பு மின்சுற்றிலிருந்து உமிழப்படுகின்ற,வழக்கமாய் அடிக்கடி ஏற்படுகின்ற சமிக்கை.இந்த சமிக்கையால் உருவாக்கப்படும் குறுக்கீட்டையும் இது குறிக்கிறது.2.சில நுண்கணினி அமைப்புகளில்,குறிப்பாக மெக்கின்டோஷ் கணினியில்,ஒரு வினாடியில் அறுபதில் ஒருபங்கு. நிரல்கள் பயன் படுத்தும் அகநிலைக் கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் அடிப்படை நேர அலகு.

tiebreaker:சமன் நீக்கி;முடிச்சகற்றி: இரண்டு மின்சுற்றுகளுக்கிடையே எது முன்னுரிமை பெறுவது என்கிற சிக்கல் ஏற்பட்டு செயல்பாடு தடைப்படும்போது,ஒரு நேரத்தில் ஒரு மின்சுற்றுக்கு முன்னுரிமை தந்து சிக்கலைத் தீர்த்துவைக்கின்ற ஒரு மின்சுற்று.