பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

underscore

459

Uniform Naming Convention


இதுபற்றிய விவரங்கள் undernet.org என்ற முகவரியில் கிடைக்கின்றன.

underscore : அடிக்கீறு : கீழிறங்கித் தோற்றமளிக்கும் இணைப்புக் குறி. விசைப்பலகையில் இணைப்பு/ கழித்தல் (Minus/Hyphen) குறிக்கு மேல்பகுதியில் இருக்கும். நகர்வு(Shift) விசையுடன் சேர்த்து அழுத்தினால் அடிக்கீறு கிடைக்கும். பெரும்பாலும் இரட்டைச் சொற்களை ஒரே சொல்லாகக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. (எ-டு) First_Name, Basic_Pay அடிக்கோடு (underline) வேறு, அடிக்கீறு (underscore) வேறு. அதுபோலவே இணைப்புக் குறியும், அடிக்கீறும் வேறுவேறு.

undo/redo : செய்தது தவிர்/தவிர்த்தது செய்.

undock : பிரி; விலக்கு : 1.பிணைக்கப்பட்ட பணிநிலையக் கணினியிலிருந்து மடிக்கணினியைப் பிரித்தெடுத்தல். 2. கருவிப் பட்டையை சாளரத்தின் விளிம்பிலிருந்து பிரித்தெடுத்து வேறிடத்தில் வைத்தல். இதனால் கருவிப்பட்டை, விருப்பப்படி நகர்த்திச் செல்லும்படியான தனிச் சாளரமாக ஆகிவிடும்.

unexpected halt : எதிர்பாரா இடை நிறுத்தம்.

unfreeze columns : அணைத்து நெடுக்கையும் விடுவி.

ungroup : குழு கலை.

unhide : வெளிக்கொணர்.

unhide columns : நெடுக்கைகள் வெளிக்கொணர்.

unhandled exception : கையாள விதிவிலக்கு : இயக்கநேரப் பிழைகளை முன்கூட்டியே அறிந்து அவற்றைக் கையாளும் நிரல் கூறுகளை நிரலர் எழுத வேண்டும். இது விதிவிலக்குக் கையாளுதல் (Exception Handling) என்றழைக்ப்படுகிறது. நிரலர் கையாளாத பிழை, இயக்க நேரத்தில் ஏற்படுமெனில், இயக்க முறைமை நிரலைப் பாதியிலேயே முடித்துவிடும்.

unicode : யுனிகோடு : 1988-1991 காலகட்டத்தில் யுனிகோடு கூட்டமைப்பு உருவாக்கிய 16 பிட் எழுத்துக் குறியாக்கத் தர வரையறை. ஒர் எழுத்தைக் குறிக்க இரண்டு பைட்டுகள் பயன்படுவதால் மொத்தம் 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட (216) எழுத்துகளைப் பெறமுடியும். எனவே யுனிகோடில் உலகத்திலுள்ள வரிவடிவம் கொண்ட அனைத்து மொழி எழுத்துத் தொகுதிகளையும் பெறமுடியும். ஆனால் 1-பைட் எழுத்துக் குறிமுறையான ஆஸ்க்கியில் 256 எழுத்துகள் மட்டுமே இயலும். ஆஸ்க்கியின் 256 எழுத்துகளும் யுனிக்கோடின் முதல் 256 இடங்களில் இருத்தப்பட்டுள்ளன. 39,000 இடங்கள் பல்வேறு மொழிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 21000 இடங்கள் பண்டைச் சீன வரி வடிவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதியிடங்கள் வருங்கால விரிவாக்கத்துக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழுக்கு 128 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிகமான இடங்கள் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Uniform Naming Convention : 905 சீரான பெயரிடு மரபு : பிணையத்தில், கோப்புகளுக்குப் பெயரிடுவதில் பின்பற்றப்படும் நடைமுறை. பிணையத்திலுள்ள பிற கணினிகள் ஒரு குறிப்பிட்ட கோப்பினைக்