பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



user defined function key

465

UTP


struct employee

{

chan name [15];

int age;

float wage;

};

struct employee e1, e2;

user defined function key : பயனாளர் வரையறுக்கும் பணிவிசை.

user-defined exception : பயனாளர் வரையறு விதிவிலக்கு.

user files : பயனாளர் கோப்புகள்.

user interface tier :பயனாளர் முக அடுக்கு.

user level security wiz : பயனாளர் நிலை பாதுகாப்பு வழிகாட்டி

username : பயனாளர் பெயர் : ஒரு கணினி அமைப்பில் அல்லது பிணையத்தில் பயனாளர் ஒருவரை அடையாளங் காணப் பயன்படுவது. புகுபதிகைச் செயல்பாட்டில் பயனாளர் முதலில் பயனாளர் பெயரை உள்ளீடு செய்ய வேண்டும். பிறகு சரி யான நுழைசொல்லைத் தரவேண்டும். பயனாளர் ஒருவரின் மின்னஞ்சல் முகவரியில் @ அடையாளத்துக்கு முன்பாக இருக்கும் பெயரே பயனாளர் பெயராகவும் இருக்கும்.

user state : பயனாளர் நிலை : மோட்டோரோலா 680x0 நுண்செயலி செயல் படக்கூடிய மிகக்குறைந்த சலுகை நிலை. இந்த நிலையில்தான் பயன்பாட்டு நிரல்கள் செயல்படுகின்றன. USnail : யு'ஸ்னெயில் : 1. அமெரிக்க நாட்டு அஞ்சல் சேவைக்குத் தரப்படும் கிண்டலான பெயர். மின்னஞ்சலோடு ஒப்பிடுகையில் பழைய அஞ்சல் சேவை எவ்வளவு மெதுவானது என்பதைச் சுட்ட இவ்வாறு அழைக்கப்படுகிறது. 2. அமெரிக்க நாட்டு அஞ்சல் சேவையினால் வினியோகிக்கப்படும் மடல்.

USRT : யுஎஸ்ஆர்டி : உலகளாவிய ஒத்திசைவு வாங்கி/அனுப்பி என்று பொருள்படும் Universal Synchronous Receiver Transmitter என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒத்திசைவுத் நேரியல் தகவல் தொடர்புக்குத் தேவையான வாங்கி மற்றும் அனுப்பி இரண்டுக்குமான மின்சுற்றுகளையும் ஒருங்கே கொண்ட ஒற்றை ஒருங்கிணைவு மின்சுற்று.

utility software : பயன்கூறு மென்பொருள்.

utility statistics : பயன்கூறு புள்ளிவிவரம்.

utilization ratio: பயன்பாட்டு விகிதம்.

UUCP : யுயுசிபீ : யூனிக்ஸிலிருந்து யூனிக்ஸுக்கு நகலெடுப்பு என்று பொருள்படும் UNIX-to-UNIX Copy என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். நேரியல் தகவல் தொடர்பினை, குறிப்பாக பொது இணைப்பக தொலைபேசிப் பிணையத்தைப் பயன்படுத்தி யூனிக்ஸ் கணினிகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்யப் பயன்படும் மென்பொருள் நிரல்களின் தொகுப்பு.

UTP : யுடீபீ, உறையிடா முறுக்கிணை என்று பொருள்படும் Unshielded Twisted Pair என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒன்று அல்லது மேற்பட்ட முறுக்கிணைக் கம்பிகளை கொண்ட, கூடுதலான உறைகள் எதுவும் இடப்படாத ஒரு வடம். உறையிட்ட முறுக் கிணை வடத்தைவிட நெகிழ்வானது. குறைந்த இடப் பரப்பையே எடுத்துக்


30