பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

validation text

468

.va.us


மொழியின் வரையறுக்கப்பட்ட வரன்முறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளனவா என்பதை அளவிடு வதற்கான சோதனைகள் அடங்கிய ஒரு தொகுதி.

validation text:செல்லுபடி உரை.

validity check:ஏற்புத்தகுதிச் சரிபார்ப்பு: செல்லுபடிச் சரிபார்ப்பு : பெறப்படுகின்ற தகவல் முன்வரையறுக்கப் பட்டுள்ளபடி முழுமையானதாகவும் முரண்பாடின்றியும் உள்ளதா என்று தீர்மானிக்க மேற்கொள்ளப்படும் பகுப்பாய்வுச் செயல்பாடு.

value added network(WAN):மதிப்பேற்று பிணையம்.

value-added reseller:மதிப்பேற்று மறுவிற்பனையாளர்: வன்பொருள், மென்பொருள்களை மொத்தமாக வாங்கி, பராமரிப்பு போன்ற பயனாளர்களுக்கான சேவைகளையும் இணைத்து பொதுமக்களுக்கு மறுவிற்பனை செய்யும் ஒரு குழுமம்.

value list:மதிப்புப் பட்டியல்: தரவுத்தளம் போன்ற பயன்பாட்டுத்தொகுப்புகளில் ஒரு குறிப்பிட்ட தகவலைக் கண்டறிவதற்கான தேடு சரமாகவோ (search string),அல்லது வடிகட்டி எடுக்கப்படும் வினவலுக்கான மதிப்புகளாகவோ பயன்படுத்தப்படும் மதிப்புகளின் பட்டியல்.

value, null:வெற்று மதிப்பு: இல் மதிப்பு.

value type:மதிப்பு இனம். சி மொழியில் int,char,float மூல தரவு இனங்களும் "மதிப்பு இனம்" எனப்படுகின்றன.சி# மொழியில் இத்தகு "மதிப்பு இனம்" தவிர ஆகியவை class, interface,delegate ஆகியவை "குறிப்பு இனம்" என வகைப்படுத்தப்படுகின்றன.

.vancouver.ca:வான்கூவர்.சிஏ. ஓர் இணையதள முகவரி கனடா நாட்டு வான்கூவர் நகரைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

vapourphase refrigiration:ஆவி வழி குளிரூட்டு முறை.

variable address:மாறு முகவரி.

variable block:மாறு தொகுதி.

variable expression:மாறுநிலைத் தொடர். குறைந்தபட்சம் ஒரு மாறியை (variable) அடிப்படையாகக் கொண்டுள்ள கணக்கீட்டுத் தொடர்.எனவே நிரல் இயங்கும்போது கட்டாயமாக மதிப்பு கணக்கிட வேண்டிய தொடராக இது இருக்கும்.

variable field:மாறு புலம்.

variable length:மாறு நீளம்.

variable-length record:மாறு நீள ஏடு: மாறுநீளப் புலங்களைக் கொண்டுள்ள ஏடு. அல்லது மாறுபட்ட எண்ணிக்கையிலான புலங்களைக் கொண்டுள்ள ஏடு,குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சில புலங்கள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். இதன்காரணமாய் தரவுத் தளத்தில் ஒவ்வொரு ஏடும் வெவ்வேறு நீளத்தில் இருக்க வாய்ப்புண்டு.

variable resistor:மாறு மின்தடை.

variables:மாறிகள்.

variation:மாறுபாடு.

.va.us:வி.ஏ.யு.எஸ்: ஓர் இணையதள முகவரி அமெரிக்க நாட்டின் வர்ஜீனியா மாநிலத்தைச் சேர்ந்தது