பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VFAT

472

VI


முறை அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு ராக்வெல் இன்டர்நேஷனல் நிறுவனம்,இணக்கிகளில் செயல் முறைப்படுத்திய,ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்பேற்ற தர வரையறை.வி.வேக வகுப்பு,வி.34 ஆகிய இரண்டு இணக்கிகளுமே 28.8கேபிபீஎஸ் வேகத்தில் பரிமாறச் செய்யும் திறன்பெற்றவை என்ற போதிலும் வி.வேக வகை இணக்கிகள் வி.34 இணக்கிகளுடன் தகவல் தொடர்பு கொள்ள முடியாது. வி.வேக இணக்கிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

VFAT:விஃபேட்: மெய்நிகர் கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை என்று பொருள்படும் Virtual File Allocation Table என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.விண்டோஸ் 95 இயக்க முறைமையில்,வட்டுகளை அணுகுவதற்கு, நிறுவத்தகு கோப்பு முறைமை மேலாளர் (Installable File System Manager-IFS Manager) மென்பொருளின் கீழ் பயன்படுத்தப்படும் கோப்பு முறைமை இயக்கி மென்பொருள் இது.விஃபேட், எம்எஸ்-டாஸ் வட்டுகளுடன் ஒத்தியல்பானது. ஆனாலும் அதைவிட வேகமாகச் செயல்படக்கூடியது.விஃபேட் 32-பிட் குறிமுறையைப் பயன்படுத்துகிறது. பாதுகாக்கப்பட்ட பாங்கில் இயங்கக் கூடியது. வட்டு இடைமாற்றாக விகேஷ் (Vcache)-ஐப் பயன் படுத்துகிறது. நீண்ட கோப்புப் பெயர்களை ஏற்கிறது.

vg:விஜி:ஓர் இணையதள முகவரி அமெரிக்காவின் விர்ஜின் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

VGA:விஜிஏ: ஒளிக்காட்சி வரை கலைத் தகவி என்று பொருள்படும் Video Graphics Adapter என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.இஜிஏ (EGA-Enhanced Graphics Adapter) தகவியின் அனைத்து ஒளிக்காட்சிப் பாங்குகளையும்,கூடுதலான பல பாங்குகளையும் கொண்ட ஓர் ஒளிக்காட்சித் தகவி.

'VHLL:விஹெச்எல்எல்: மீவுயர் நிலை மொழி என்று பொருள்படும் Very High Level Language என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

.Vi:விஐ: ஓர் இணையதள முகவரி பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

Vi1:விஐ1:காட்சி எனப்பொருள்படும் visual என்பதன் சுருக்கம். யூனிக்ஸில் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட முழுத்திரை உரைத்தொகுப்பி.மிகத் திறன்வாய்ந்த விசைப்பலகைவழிக் கட்டளைகளையும் உள்ளடக்கியது.இயலறிவால் எளிமையாகப் புரிந்துகொள்ளும் கட்டளைகள் என்று சொல்ல முடியாது.இமேக்ஸ் (Emacs) போன்ற பல்வேறு நவீன உரைத்தொகுப்பிகள் வந்துவிட்ட போதிலும் யூனிக்ஸில் விஐ உரைத்தொகுப்பி இன்னும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

Vi2:விஐ2: யூனிக்ஸில் விஐ உரைத்தொகுப்பி மூலம் ஒரு கோப்பினைக் கையாள்வதற்கான கட்டளை,vi letter.txt எனக் கட்டளை அமைப்பின் letter.txt என்னும் கோப்பு திரையில் விரியும்.