பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

virtual memory management

476

virtual private network


virtual memory management:மெய்நிகர் நினைவக மேலாண்மை.

virtual name space:மெய்நிகர் பெயர்வெளி: ஒரு பயன்பாடு குறிப்பிட்ட பொருள்களின் இடமறியப் பயன்படுத்தக்கூடிய படிநிலைத் தொடர்ச்சியால் அமைந்த பெயர்களின் தொகுதி.அப்படியொரு பெயர்களின் தொடர்வரிசை,மெய்நிகர் பெயர்வெளியில் அப்பொருளின் இருப்பிடப் பாதையைக் குறிக்கிறது.அக்கணினி அமைப்பில்,அப்பாதையில் குறிப்பிட்ட படிநிலையில் பொருள்கள் அமைந்துள்ளனவா என்பது முக்கியமில்லை.எ-டு): ஒரு வலை வழங்கனின் மெய்நிகர் பெயர்வெளி என்பது,அந்த வழங்கன் செயல்படும் பிணையத் திலுள்ள அனைத்து யுஆர்எல்களின் முகவரிகளைக் குறிக்கிறது.

virtual network:மெய்நிகர் பிணையம்: ஒரு பிணையத்தின் ஒரு பகுதி,பயனாளரைப் பொறுத்தமட்டில் அதனளவில் ஒரு பிணையமாகத் தோற்றமளித்தல்.எடுத்துக்காட்டாக,ஓர் இணையச் சேவையாளர் ஒற்றை ஹெச்டிடிபீ வழங்கனில் பல களங்களை(domains)அமைத்து,ஒவ்வொன்றையும் அவர்களுடைய குழுமத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட களப்பெயரின் வாயிலாகவே அணுகுமாறு செய்யலாம்.

virtual object system (VOS):மெய்நிகர் பொருள் முறைமை.

virtual path:மெய்நிகர் பாதை:1.ஒரு கணினியிலுள்ள கோப்பு முறைமையில் ஒரு கோப்பினை அணுகப் பயன்படுத்தப்படும் தொடர் வரிசையான பெயர்கள்.அக்கோப்பு முறைமையில் அக்கோப்பின் பாதையைப் போலவே அமைந்திருக்கும்.ஆனால்,அக்கோப்பு பதிவாகியுள்ள உண்மையான கோப்பக வரிசையாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.எடுத்துக்காட்டாக,வழங்கன் கணினியின் பெயரைத் தொடர்ந்து வரும் யூஆர்எல்லின் ஒரு பகுதியை மெய்நிகர் பாதை எனலாம்.2.ஒத்திசையாப் பரிமாற்ற பாங்கினில் (Asynchronous Transfer Mode-ATM)பிணையம் வழியாக,ஒன்றாக இணைக்கப்படும் மெய்நிகர் தடங்களின் பிணைப்பை மெய்நிகர் பாதை என்று கூறலாம்.

virtual printer:மெய்நிகர் அச்சுப்பொறி: அச்சுப்பொறிக்கு அனுப்பப்படும் ஒரு வெளியீட்டுத் தகவலை,அச்சுப்பொறி கிடைக்கும் வரை (தயாராகும் வரை) ஒரு கோப்பினில் சேமித்து வைத்துக்கொள்ளும் வசதி.பெரும்பாலான இயக்க முறைமைகளில் இவ்வசதி உள்ளது.

virtual private network:மெய்நிகர் தனியார் பிணையம்:1.இணையம் போன்ற பொதுப் பிணையத்தில் இணைக்கப்பட்ட கணுக் கணினிகளின் தொகுதி.மறையாக்கத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி,வெளியார் எவரும் அத்துமீறி நுழையா வண்ணம்,ஒரு தனியார் பிணையம் போன்றே பாதுகாப்பான முறையில் தமக்குள்ளே தகவல்களைப் பரிமாறிக்கொள்ளல். 2.வேறொரு பிணையத்தின்மீது நிலையான மெய்நிகர் மின்சுற்றுகளின் வழியாக அமைக்கப்பட்ட ஒரு விரிபரப்புப் பிணையம். குறிப்பாக,ஏடிஎம் அல்லது சட்டகம் (frame) போன்ற தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அமைந்த பிணையம்.