பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

audio card

46

audio response


மைப்புகள் தொடர்பான தரக்கோட்பாடுகள். கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் திறன்கள் உள்ளிணைக்கப்பட்ட தாய்ப்பலகை பற்றியவை. அனைத்துச் செருகு வாய்களிலும முழுநீளப் பலகை களையும், யுஎஸ்பி துறைகளையும் ஏடிஎஸ் ஏற்க வல்லது.

audio card : கேட்பொலி அட்டை : கணினியின் தாய்ப்பலகையில் பொருத்தக்கூடிய விரிவாக்க அட்டை. தொடர்முறை (analog) வடிவிலான கேட்பொலிச் சமிக்கை களை இலக்கமுறைக்கு மாற்றி, கணினியில் கோப்புகளாகப் பதிவு செய்யவும், கணினிக் கோப்புகளை மின்காந்த சமிக்கைகளாக மாற்றி ஒலிபெருக்கி மூலம் கேட்பொலி யாகத் தரவும் இவ்வட்டை பயன்படுகிறது. கணினியில் இணைக்கப்பட்ட ஒலி வாங்கி மூலம் கேட்பொலியை உள்ளீடாகத் தர முடியும், வெளி யீட்டு ஒலியை ஒலி பெருக்கி மற்றும் தலைபேசி (headphone) மூல மாகக் கேட்க முடியும். கேட்பொலிக் குறுவட்டுகள், ஒலிநாடாக்கள் மற்றும் இணையத்திலிருந்தும் ஒலியை/இசையை, பாடலைக் கேட் பதற்கு கேட்பொலி அட்டைகள் உதவுகின்றன. இவை ஒலி அட்டை, ஒலிப்பலகை, கேட்பொலிப்பலகை என்றும் அழைக்கப்படுகின்றன.

audiocast : கேட்பொலி பரப்புகை : இணைய நெறிமுறை எனப்படும் ஐ.பீ நெறிமுறையைப் பயன்படுத்தி கேட்பொலிச் சமிக்கைகளைப் பரப்புதல்.

audio CD : ஒலிக் குறுவட்டு : கேட்பொலிக் குறுவட்டு,

audio cassette : கேட்பொலிப்பேழை : ஒலிப் பேழை.

audio conferencing : ஒலி சொல்லாடல் : கேட்பொலிச் சொல்லாடல்.

audio compression : கேட்பொலி இறுக்கம் : கேட்பொலிச் சமிக்கைகளின் ஒட்டுமொத்த சத்த அளவைக் குறைப்பதற்கான வழிமுறை. ஒரு கேட்பொலிச் சமிக்கையை ஒர் ஒலி பெருக்கி மூலமாக ஒலிபரப்பும் போதோ, தகவல் தொடர்பு ஊடகம் வழியாக அனுப்பிடும்போதோ ஏற்படும் மேலோட்டமான சிதைவின் அளவும் இம்முறையில் கட்டுப் படுத்தப்படுகிறது.

audio file : கேட்பொலிக் கோப்பு.

audio editor programmes : ஒலி தொகுப்பு நிரல்கள்.

audio monitor : கேட்பொலிக் கண்காணி.

audio graphics : கேட்பொலி வரைகலை  : ஒலி வரையம்.

audio output port : கேட்பொலி வெளியீட்டுத் துறை : இலக்கமுறை யிலிருந்து தொடர்முறைக்கு மாற்றும் மின்சுற்று. இதுதான் கணினியிலுள்ள தகவலைக் கேட்பொலியாக மாற்றித் தருகிறது. இம்மின்சுற்று, ஒலி பெருக்கி, பேச்சொலி பெருக்கி ஆகியவற்றுடன் இணைந்து பயன் படுத்தப்படுகிறது.

audio properties : கேட்பொலி பண்புகள்

audio response : கேட்பொலி மறுமொழி : ஒரு குறிப்பிட்ட வகை உள்ளீட்டைப் பெற்றுக் கொண்டு, கணினி உருவாக்கும் ஒலி - குறிப்பாக பேச்சொலி வெளியீடு. இத்தகைய வெளியீடு, இலக்கமுறைப் படுத்திய அகராதியிலுள்ள சொற்களின் கூட்டாகவோ, அட்டவணை