பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

visual symbols

480

voice answer back


பயன்பாடுகளை உருவாக்க வகைசெய்யும் ஒரு நிரலாக்க வழிமுறை.

visual symbols:காட்சிக்குறியீடுகள்:

VL bus: விஎல் பாட்டை: வே.சா (VESA) உள்ளமை பாட்டை என்பதன் சுருக்கம்.வீடியோ எலெக்ட் ராணிக்ஸ் ஸ்டேண்டர்டு அசோஷியேஷன் நிறுவனம் அறிமுகப்படுத்திய உள்ளமை பாட்டைக் கட்டுமானத்தில் ஒருவகை.இதன்படி ஒரு பீசி தாய்ப்பலகையில் மூன்று விஎல் பாட்டை செருகுவாய்களை வைத்துக்கொள்ளமுடியும். சி.பீ.யு.வின் துணையின்றி நுண்ணறிவுத் தகவி அட்டைகள் தாமே சில செயல்பாடுகளை நிறைவேற்றும்,பஸ் மாஸ்டரிங் இதில் இயலும். ஒரு விஎல்பாட்டைச் செருகுவாய் வழக்க மான இணைப்பியுடன் கூடுதலாக 16-பிட் நுண்தடக் கட்டுமான இணைப்பியைக் (Micro Channel Architecture Connector)கொண்டிருக்கும். ஆனால்,தயாரிப்பாளரே இதனைத் தாய்ப்பலகையில் உள்ளிணைத்திருக்க வேண்டும். வழக்கமான இணைப்பிகளை விஎல் பாட்டைச் செருகுவாய்களாகப் பயன்படுத்த முடியாது.விஎல் பாட்டைத் தகவி அல்லாத அட்டையை ஒரு விஎல் பாட்டைச் செருகுவாயில் பயன்படுத்த முடியும். ஆனால் அது உள்ளமை பாட்டையைப் பயனபடுத்த முடியாது.எனவே ஒரு சாதாரண பாட்டைச் செருகுவாய் போலவேதான் செயல்படும்.

VLF radiation: விஎல்எஃப் கதிர்வீச்சு: மிகக் குறைந்த அலைவரிசைக் கதிர்வீச்சு (Very-low Frequency Radiation) என்பதன் சுருக்கம். ஏறத்தாழ 300 ஹெர்ட்ஸ் முதல் 30 கிலோ ஹெர்ட்ஸ் வரம்பெல்லைக்குள் உள்ள அலைவரிசைகளில் நிகழும் மின்காந்தக் கதிர்வீச்சு.வானலைக் கதிர்வீச்சு என்றும் கூறுவர். கணினித் திரையகங்கள் இத்தகைய கதிர்வீச்சை உமிழ்கின்றன.கணினித் திரையகம் இத்துணை அளவுதான் விஎல்எஃப் கதிர்வீச்சை உமிழ வேண்டும் என்கிற வரையறையினை எம்பீஆர் ll என்னும் தன்னார்வத் தர வரையறை உள்ளது.

WLIW:விஎல்ஐடபிள்யூ: மிகநீண்ட ஆணைச்சொல் என்ற பொருளைக் குறிக்கும் Very Long instruction Word என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.சிறுசிறு எளிய ஆணைகளை ஒன்றுசேர்த்து நீண்ட ஒற்றை ஆணைச்சொல்லாக உருவாக்கும் ஒருவகைக் கட்டுமானம்.இந்நீண்ட ஆணைச்சொல் பல பதிவகங்களை எடுத்துக்கொள்கின்றது.

VM:விஎம்:மெய்நிகர் பொறி எனப்பொருள்படும். Virtual Machine என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மெய்நிகர் பொறிச்செயல்திறனை வழங்கும் ஐபிஎம்மின் பெருமுகக் கணினிகளுக்கான இயக்கமுறைமை.

.vn :.விஎன்: ஓர் இணையதள முகவரி வியத்நாம் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

vocal sounds:பேச்சொலிகள்.

voice answer back:குரல் பதிலுரை; குரல் மறுமொழி:கட்டளைகள்,வினவல்களுக்குப் பதிலுரையாக ஒரு கணினி,ஏற்கெனவே ஒலிப்பதிவு செய்யப்பட்ட செய்திகளைப் பயன்படுத்துதல்.