பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Bernoulli Box drive

57

Bezier curve


இயற்பியல் அறிஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. காற்றியக்கத்தில் செயல்படும் இயங்கேணி (lift) பற்றிய கோட்பாட்டை முதன் முதலில் செயல்படுத்திக் காட்டியவர். பெர்னவுலிப் பெட்டி, மிகு வேகத்துடன் சுழலும் நெகிழ்வட்டை வட்டின் எழுது/படிப்பு முனைக்கு அருகில் கொண்டுவரும்.

Bernoulli Box drive : வட்டு இயக்ககம்.

Bernoully drive : பெர்ண்வுலி இயக்ககம்.

Bernoulli process : பெர்னவுலி செயலாக்கம் : பெர்னவுலி தேர்வாய்வு முறையை உள்ளடக்கிய ஒரு கணிதமுறைச் செயலாக்கம். புள்ளியியல் பகுப்பாய்வில் மிகவும் பயன்படுகிறது. வெற்றி, தோல்வி என்கிற இரண்டே இரண்டு முடிவுகளை மட்டுமே கொண்ட ஒரு பரிசோதனையை திரும்பத்திரும்ப செய்வதால் ஏற்படக்கூடிய முடிவுகளை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்தல்.

Bernoulli sampling process : பெர்னவுலி மாதிரிகாண் செயலாக்கம் : ஒவ்வொரு முயற்சியிலும் இரண்டிலொரு முடிவைத் தரக்கூடிய ஏதேனும் ஒரு பரிசோதனையை, தொடர்ச்சியாக n தடவைகள், ஒன்றையொன்று சாராத, ஒரே மாதிரியான தேர்வாய்வுக்கு உட்படுத்தும்போது வரக்கூடிய முடிவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் புள்ளியியல் ஆய்வு. (எ-டு): ஒரு நாணயத்தைச் சுண்டினால் பூ அல்லது தலை விழும். 10 முறை சுண்டினால் எத்தனை முறை தலை விழும்? எத்தனை முறை பூ விழும்?

best of breed : உள்ளதில் சிறப்பு ; ஆயிரத்தில் ஒன்று : குறிப்பிட்ட வகைப்பிரிவில் மிகச்சிறந்த பொருளைக் குறிக்கும் சொல். வன் பொருளாகவோ மென்பொருள் தொகுப்பாகவோ இருக்கலாம்.

beta test : பீட்டா சோதனை : மென் பொருள் அல்லது வன்பொருள், இறுதியாகப் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக பலகட்டச் சோதனைக்கு உட்படுத்தப்படும். அவற்றுள் வெளியீட்டுக்கு முந்தைய இறுதிக் கட்டச் சோதனை 'பீட்டா சோதனை எனப்படுகிறது.

beta site : பீட்டா தளம் : ஒரு மென்பொருளின் பீட்டா சோதனையை மேற்கொள்ளும் ஒரு தனி நபர் அல்லது ஒரு நிறுவனம். மென் பொருளை உருவாக்கிய நிறுவனம், பெரும்பாலும் பட்டறிவுமிக்க வாடிக்கையாளர், தன்னார்வலர்களின் குழுவில் சிலரையே பீட்டாத் தளமாகத் தேர்வு செய்யும். பெரும்பாலான பீட்டாத் தளத்தினர் இச் சேவையை இலவசமாகவே செய்வர். வெளியீட்டுக்கு முன் பயன்படுத்தும் வாய்ப்பு, மென்பொருளின் இலவச நகல் இவர்களுக்குக் கிடைக்கிறது. வெளியிடப்பட்ட பின்பு, இறுதிப் படைப்பின் இலவசநகலும் இவர்களுக்குக் கிடைக்கும்.

beta version : பீட்டா பதிப்பு : வெளியீட்டுக்கு முந்தைய பரிசோதனைப் பதிப்பு.

between : இடையில் .

Bezier curve : பெஸியர் வளைவு : ஒரு குறிப்பிட்ட கணித முறைப்படி இரண்டு தனிப்புள்ளிகளை இணைத்து வரையப்படும் இழைவான வளைகோடு மற்றும் வரை தளம். கேட் உருமாதிரி (CAD model) களுக்கு தேவையான ஒன்று. ஒரு