பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

binary arithmetic

59

binhex


செயல்படாமல் விக்கித்து நிற்கும்போது, கடைசி முயற்சியாக இந்த விசையைப் பயன்படுத்தி கணினிக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கலாம் (Re-booting), ஐபிஎம் பீசி மற்றும் பல கணினிகளிலும் தொடக்க காலங்களில் இந்த விசை பெரிதாக சிவப்பு வண்ணத்தில் இருந்தது கணினி நடுவில் நின்று விடும்போது, இந்த விசையைப் பயன்படுத்தி கணினிக்குப் புத்துயிர் ஊட்டுவதில் ஒர் ஆபத்தும் உள்ளது. நிலையா நினைவகத்தில் (RAM) உள்ள தகவல்கள் அழிக்கப்பட்டு விடும். நிலை வட்டும் பழுதுபட வாய்ப்புள்ளது. எனவேதான் இவ்விசையை இறுதி ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்.

binary arithmetic : இருமக் கணக்கீடு

binary arithmetic operation : இரும பூலியன் செயற்பாடு.

binary boolian operation : இருமக் கணக்கீட்டுச் செயல்பாடு.

binary chop : இரும வெட்டு.

binary coded decimal notation : இருமக் குறியீட்டு பதின்மக் குறிமானம்.

binary coded decimal representation : இருமக் குறியீட்டு பதின்ம உருவகிப்பு.

binary coded digit : இருமக் குறியீட்டு இலக்கம்.

binary conversion : இரும எண் மாற்றம் : ஒரு பதின்ம (decimal) எண்ணை இரும எண்ணாக மாற்றலும், ஒர் இரும எண்ணை பதின்ம எண்ணாக மாற்றலும்.

binary digits : இரும எண்முறை : இருமநிலை இலக்கங்கள்.

binary file transfer : இரும கோப்புப் பரிமாற்றம் : இரும வடிவில் தகவல் பதியப்பட்டுள்ள கோப்புகளை கணினி வாயிலாகப் பரிமாற்றம் செய்தல். உரைவடிவக் கோப்புகளைப் பரிமாறிக் கொள்வதிலிருந்து மாறுபட்டது. தற்போதைய நவீன கணினி இயக்க முறைமைகளில் ஓர் உரைக் கோப்பே, அச்சிடத்தக்க எழுத்துகளடங்கிய இருமக் கோப்பாகவே கருதப்படுகிறது. ஆனால் பழைய முறைமைகளில் இவற்றை வேறுபடுத்திப் பார்க்கும் முறை இருந்தது.

binary half adder : இரும அரைகூட்டி.

binary language : இரும மொழி.

binary operation : இரும செயற்பாடு.

binary representation : இரும உருவகிப்பு.

binary row : இரும வரிசை : இருமக் கிடக்கை.

binary time : இரும நேரம்.

binary decimal conversion : இரும பதின்ம மாற்றம்.

binary transfer : இருமப் பரிமாற்றம் : இயக்குநிலை (executable) கோப்புகள், பயன்பாட்டு தகவல் கோப்புகள் மற்றும் மறையாக்கம் செய்யப்பட்ட கோப்புகளை கணினி வழியாகப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு உகந்த மின்னணுத் தகவல் பரிமாற்ற முறை.

binhex : பின்ஹெக்ஸ் : 1. இருமத் தகவல் கோப்புகளை, மின்னஞ்சல் மற்றும் செய்திக் குழுக் கட்டுரையாக மற்றொரு கணினிக்கு அனுப்பு வதற்கு உகந்த வகையில் ஆஸ்கி (ASCII) உரைக் கோப்பாய் மாற்று வதற்கான குறிமுறை. இணையத்தில் ஆஸ்கிக் குறியீட்டு வடிவில் தகவல்