பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

index

128

infix

நிலைக்குச் சென்று, மீண்டும் சரிபார்த்தலைச் செய்க. 4) விடை 'இல்லை' எனில், திரும்பத் திரும்பச் செய்யும் நடைமுறைகள் முடிவுற்றன என்பது பொருள்.

index word - The word used to address data stored in a table in memory. குறியீட்டுச் சொல் : நினைவக அட்டவணையிலுள்ள தகவலை இனங்காண பயன்படும் சொல்.

India Internet World 2000 - இந்திய இணைய உலகம் 2000 : இது ஒரு மாநாடு. 2000 செப்டம்பர்த் திங்கள் தில்லியில் பிரகதி திடலில் நடைபெற்றுப் பொது மக்கள் கலந்து கொண்ட மாநாடு.

indicator - 1) A lamp on a peripheral unit 2) A device set when a specified condition occurs. It may be tested by a programme for initiating an appropriate course of action. நிலைகாட்டி : 1) வெளிப்புற அலகிலுள்ள விளக்கு. 2) குறிப்பிட்ட நிலைமை உருவாகும் பொழுது அமைக்கப்படும் கருவியமைப்பு, உரிய செயல் முறையைத் துவக்க, நிகழ்நிரலால் இதை ஆய்ந்து பார்க்க இயலும்.

indicator chart - A chart used by a programmer during the logical design and coding of a programme. This procedure records details about the use of indicators in the programme. நிலைகாட்டிப்படம் : முறைமை வடிவமைப்பிலும் நிகழ்நிரல் குறிமுறையாக்கலிலும் நிகழ்நிரலர் பயன்படுத்தும் படம். இச்செயல் முறை நிகழ்நிரலிலுள்ள நிலை காட்டிகளைப் பயன்படுத்துவது பற்றிய விவரங்களைப் பதிவு செய்யும்.

infinity - Any number larger than the maximum number, A computer can store this number in any register. முடிவிலி : கந்தழி. பெரும எண்ணைவிடப் பெரியதாக உள்ள எண். எப்பதிவகத்திலும் இந்த எண்ணைக் கணிப்பொறி சேமித்து வைக்க வல்லது.

infix notation - A notation used for representing logical operators. In these operations the operator is written between the operands, eg. A & B. Here & represents the operation ‘and'. உள்ளமை குறிமானம் : முறைமைச் செயல்களைக் குறிக்கப் பயன்படுவது. இச்செயல்களில் செயலி, செயலிடங்களுக்கிடையே எழுதப்படும். எ-டு A& B. இங்கு & என்பது செயல் and ஐக் குறிக்கும்.