பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

k56

142

laser


இது தமிழ்ச் சொல்முறை யாக்கி. இதில் இவர் 7000 சொல் வளமுள்ள அகர வரிசையை அடக்கியுள்ளார். இவற்றிற்கு இணையாக ஆங்கிலக் சொற்களையும் கொடுத்துள்ளார்.இது எழுத்துப் பிழையைத் திருத்த உதவுவது.இவர் ஒளியுரு அறிதல் மென் பொருள் உருவாக்குவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளார்.

K56flex - கே56பிளக்ஸ் : 56 கேபிபிஎஸ்களில் வேலைசெய்யும் இருபண்பிகளுக்குரிய திட்ட அமைப்பு. ராக்வெல் அனைத்துலக கழகத் தாலும் லூசண்ட் தொழில் நுட்பங்களாலும் உருவாக்கப்பட்டது. 1998 க்கு பின் இதன் பெயர் வி-90.

L

label - குறியம் : இது எண்ணெழுத்து அடிப்படையில் அமைந்தது. புலப் பெயர்களைத் தெரிவிப்பது.

lace - துளையிடு : அட்டை வரிசை.

language - A set of symbols,words and rules used to write a programme of instructions for a computer, Eg. BASIC.மொழி:குறியீடுகள் சொற்கள் விதிகள் ஆகியவற்றைக் கொண்ட தொகுதி.கணிப்பொறிக்குரிய கட்டளை நிகழ் நிரலை எழுதப் பயன்படுவது. எ-டு.பேசிக்.

large scale integrated circuit,LSI Circuit-பேரளவுத் தொகையாக்கு ஒருங்கினை சுற்று,பேதொஒசு:எதில் 30000 பகுதிகள் உண்டு.4ஆம் தலைமுறைக் கணிப்பொறியில் பயன்படுவது.

large scale integration, LSI - A process of making integrated circuits with between 100 and 5000 logic gates in the chip. பேரளவுத் தொகையாக்கல், பேஅதொ:நறுவலில் 100 -5000 முறைமை வாயில்கள் உள்ள ஒருங்கிணை சுற்றுகளை அமைக்கும் முறை. இது நுண்முறையாக்கியில் உள்ளது.

laser - லேசர் : ரேடார் போன்று தலைப்பெழுத்துச் சுருக்கச் சொல். கதிர்வீச்சு தூண்டுமிழ்வு ஒளிப்பெருக்கம் Laser, Light Amplification by.stimulated Emission of Radiation. ஆற்றல் வாய்ந்ததும் ஒருங்கிணைந்ததுமான ஒளிக்கற்றையை உருவாக்கவல்ல கருவி, கணிப்பொறிக்கு மூத்தது. பல துறைகளிலும் அருஞ் செயல்களைச் செய்து வருவது, எ-டு கண்ணறுவை, ஒளியச்சு.

laser memory - லேசர் நினைவகம் :ஒருவகை கூர்மையான நினைவகம். லேசர் ஒளியால் உண்டாவது.