பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mon

159

mouse


வரை எல்லையில் ஒரு வகை.

monitor - A computer software lying in ROM. It looks after various routine duties. Eg. Display graphics. கண்காணிப்பி : படிப்பதற்குரிய நினைவகத்திறனுள்ள கணிப்பொறி மென்பொருள். பல நடைமுறைச் செயல்களைக் கவனிப்பது, எ-டு. வரைகலைகளைக் காட்டுதல்.

Moore's law - மூர் விதி : ஒரு தனிச் சிலிகன் நறுவலில் ஒருங்கிணைக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கை ஒவ்வோராண்டும் இரட்டிப்பாகும். இம்முன்னறிவிப்பு இண்டல் நிறுவன நிறுவனரான கார்டன் மூர் என்பவரால் 1960களில் செய்யப்பட்டது. சிற்றளவு ஒருங்கிணைப்பு முறையில் இப்பொழுது ஒருங்கிணைப்பு சுற்றுகள் உருவாக்கப்பட்டன. இம் முன்னறிவிப்பு இன்றும் பொருந்துவதாக உள்ளது.

Motorola - மோட்டாரோலா : மின்னணுக் கருவித் தொகுதி உற்பத்தி செய்யும் நிறுவனம். எ.டு. மோட்டாரோலா 6800, 6809 M6800 நுண்முறையாக்கி. உலக அளவில் செய்தித் தொடர்பு கொள்ளச் செயற்கை நிலாக்களை விடும் திட்டத்தையும் நிறைவேற்றிவருவது.

mouse- சுட்டெலி : சுண்டெலி வடிவமுள்ளதாலும் சுண்டெலி போல் சுறுசுறுப்பாக இயங்குவதாலும் இதற்கு இப்பெயர். மேசையில் வைத்துக் கையை அசைத்துக் கணிப்பொறித் திரையில் உள்ள சுட்டியைத் திரையின் எப்பகுதிக்கு வேண்டுமானாலும் நகர்த்தலாம். இதனால் திரையிலுள்ள நுண் படங்கள் (icons), தத்தல்கள் (tabs) போன்றவற்றை இயக்கலாம். நிகழ்நிரலைச் செயற்படுத்துவதில் உயிர்நாடியாக உள்ளது.

mouse events - சுட்டெலி நிகழ்வுகள் : சுட்டெலியைப் பயன்படுத்தி இவற்றை உண் டாக்கலாம். சுட்டெலி-நோக்குள்ள நிகழ்வுகள் பின்வரு மாறு. 1. தட்டு (Click)- இடதுபக்கச் சுட்டெலிப் பொத்தானை அழுத்த இது உண்டாகும். 2 இரட்டைத் தட்டு (Double Click) - மேற்குறித்த பொத் தானை இருதடவை அழுத்த இது ஏற்படும். 3) இழுப்பு வீழல் (Drag Drop) - சுட்டெலிப் பொத்தான் கீழேவர இது உண்டாகும். 4) மேல் இழு (Drag over) - ஒரு பொருளை இழுக்கும்பொழுது உண்டாகும். 5) சுட்டெலி கீழ் (Mouse down)- சுட்டெலிப் பொத்தானை அழுத்த உண்டாவது. 6) சுட்டெலி மேல் (Mouse up) -