பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

SOU

202

spe

source computer - மூலக் கணிப்பொறி : மூல நிகழ் நிரலைத் தொகுக்கும் கணிப் பொறி. இது பொருளறி கணிப் பொறியுடன் சேர்ந்து நடை பெறும். பிந்திய கணிப்பொறி பொருளறி நிகழ்நிரலைக் கொண்டது.

source data entry - மூலத் தகவல் பதிவு : மூலத்திலிருந்து நேரடியாகத் தகவல்களைக் கணிப்பொறியில் சேர்த்தல்.

source document - மூல

ஆவணம் : முதல் ஆவணம்.

இதிலிருந்து தகவல்கள் கணிப் பொறி ஏற்றுக் கொள்ளக் கூடிய வடிவில் உருவாக்கப் படும்.

source language - மூல மொழி: இது ஒரு நிகழ்நிரல் மொழி. கணிப்பொறியின் வன்பொருள் இதை நேரடியாக முறையாக்க இயலாது. பொருள் நிகழ்நிரல் தொகுப்பு இதற்குத் தேவை. இந்நிகழ்நிரல் எந்திர மொழி யில் கட்டளைகளைக் கொண்' டிருக்கும். இதைக் கணிப் பொறி நேரடியாக அறியவல் லது. எ.டு கோபல் ஆல்கால், போர்ட்ரான், பிஎல்/.

source library - மூல திரட்டகம்: தொகுப்பு மொழியில் உள்ள கணிப்பொறி நிகழ்நிரல் களின் திரட்டு.

source programme -மூல நிகழ் நிரல் : முதல் மொழியில் எழுதப்பட்ட நிகழ்நிரல்.

space - இடம் : இருமி 0 அல் லது மின்னழுத்தம் இல்லை

spacing - இடைவெளி விடுதல் : இது இருவரிகள் அல்லது பத்திகளுக்கிடையே இடம் விடுதல். இதை வேண்டிய அளவுக்கு மாற்றலாம்.

special characters- சிறப்புருக்கள் : உருத் தொகுதியிலுள்ள உருக்கள். இவை எழுத்துகளோ எண்களோ அல்ல, எ-டு. !.,@

Special Interest Group, SIG - தனி நாட்டக்குழு, தநாகு : கணிப்பொறி வரைகலை, தொலை இயக்குவியல், கல்வி, தொழில் முதலியவை பற்றி மக்கள் கூடிக் கலந்துரையாடிக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளுதல்.

special purpose computer - சிறப்பு நோக்கக் கணிப்பொறி

குறிப்பிட்ட வகைச் சிக்கல்

களுக்கு மட்டுமே தீர்வு காண வடிவ ைமக்கப் பட்டுள்ள கணிப்பொறி,

special purpose language - சிறப்பு நோக்க மொழி : குறிப் பிட்ட வகைச் சிக்கலுக்கு மட்டுமே தீர்வுகாண வடிவ மைக்கப்பட்ட மொழி.

specific routine - சிறப்பு நடை முறை : கணிப்பொறி நடை முறை; குறிப்பிட்ட தகவல்