பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

start

205

stat


இயங்கு தொகுதிகளில் வேலை செய்ய வடிவமைக்கப்பட்டது. இதைத் தொடங்கல்

click Start → Programs → Star office


start bit - தொடங்கு பிட் : இதன் வேலை ஓர் உரு (ஒரு பைட்) தொடங்குவதைக் காட்டுவது. இத்தொடக்கம் ஒத்திசையாத் தகவல் செலுத்துகையில் இருக்கும்.


STAT - status - நிலை.


statement - கூற்று : மூல மொழிக் கட்டளை, ஒரு தொகுப்பியில் உட்பலனாகச் செல்லும் எந்த வெளிப்பாட்டையும் குறிப்பது, இதில் விளக்கக் கூற்றுகள், தொகுப்பின் செயலைக் கட்டுப்படுத்தும் கட்டளைகள் ஆகியவை அடங்கும்.


statement, kinds of - கூற்று வகைகள் : இவை பின்வருமாறு.

1. எண்கணிதக் கூற்றுகள் : இவை சி மொழியில் பலவகை.

2) விளக்கக் கூற்றுகள்.

3) ஒரேமுறைக் கூற்றுகள் : இடப்பக்க மாறியும் வலப்பக்கக் கோவையும் ஒரே மாதிரியாக இருக்குமானால் (முழுஎண், மிதப்பு...), பின் கோவை மதிப்பிடப்படும், ஒதுக்கீடு செய்யப்படும்.

4) கலப்பு முறைக் கூற்றுகள் : மேற்கூறிய இரண்டும் வகையில் வேறுபடும் பொழுது, அது கலப்புமுறை கூற்று எனப்படும். இந்நிலையில் வலப்பக்கக் கோவை தன் சொந்த முறையிலேயே மதிப்பீடு செய்யப்படும். முடிவு இடப்பக்க மாறியாக மாற்றியமைக்கப் பட்டு, ஒதுக்கீடு செய்யப்படும்.


statement number - கூற்று எண் : ஒவ்வொரு கூற்றுக்கும் ஒதுக்கப்படும் தொடர் எண். மூல மொழியில் எழுதப்படும் நிகழ் நிரலில் உள்ளது இது.


staticiser - முறைமையாக்கி : ஒன்றன் பின் ஒன்றாக வரும் குறிகைகளை மாற்றும் முறைமைக் கூறு.


static memory - நிலை நினைவகம் : இது வரம்பிலா அணுக்க நினைவகம் மின்னாற்றல் இருக்கும் வரை இங்குத் தகவல் இருக்கும். பயன்படுத்துவதற்கு எளிது. ஆனால், செலவு அதிகம், நெருக்கம் குறைவு, அதிக ஆற்றல் தேவை. இது இயக்க நினைவகத்திற்குக் குறைவு.


static turtle - நிலை ஆமை : லோகோ மொழியில் கூற, இதற்கு நிலைத்த இடநிலை உண்டு. இது ஒரு குறிப்பியே. முள், இடது என்னும் கட்டளைகளுக்குத் துலங்கும்.


stationery - எழுதுபொருள் : அச்சிடப்படவேண்டிய தாள்.