பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

file

98

file


ஊடகங்களில் கோப்புகள் அமைந்திருத்தல்.

file, opening - கோப்பைத் திறத்தல் : திற என்னும் சார்பலனைக் கொண்டு இதைத் திறக்கலாம். இது கோப்பு வண்ணப்பி என்னும் முழுஎண்ணைத் திருப்பி அனுப்பும். எ-டு int fd;fd= open(file-name' rwmode);

file processing - The file processing involving all operations which are connected with the creation and use of files. The operations include. creation, validation, comparing, collating, sorting and merging. கோப்பு முறையாக்கல் :கோப்புகளைப் பயன்படுத்த உருவாக்கப்படும் செயல்கள்: 1. உருவாக்கல் 2. செல்லுபடியாக்கல் 3. ஒப்பிடல் 4. ஒழுங்கு படுத்தல் 5. வகைப்படுத்தல் 6. இணைத்தல்.

file properties - கோப்புப் பண்புகள் : 1. வட்டு, நாடா முதலியவற்றில் தகவல்களைச் சேமிக்கலாம். 2. இவை எந்திரம் நின்ற பின்னும் நீடித்திருக்கும். 3. வேண்டும் பொழுது கணிப்பொறியில் போட்டுப் பார்க்கலாம்.

file protection - A mechanical device or computer command preventinge rasing of or writing upon a magnetic tape.This procedure allows a programme to read the data from the tape. கோப்புப் பாதுகாப்பு : காந்த நாடாவில் எழுதப்படுவதையோ அழிக்கப்படுவதையோ தடுக்கும் கருவியமைப்பு அல்லது கணிப்பொறிக் கட்டளை. இம்முறை நாடாவிலிருந்து தகவல்களைப் படிக்க நிகழ்நிரலை அனுமதிக்கும்.

file reference - The operation involving looking up and retrieving the information on file for a special item. கோப்புப் பார்வை : இது ஒரு செயல். இதில் ஒரு சிறப்பினத்திற்காகக் கோப்பில் தகவலைப் பார்த்தல் அல்லது மீட்டல்.

file transfer protocol, FTP - கோப்புமாற்ற மரபுச்சீரி, எஃப்டிபி: இரு ஒரு செயல். இதைக் கொண்டு தகவல் இறக்கம் செய்ய இயலும்.

file structure - கோப்பு அமைப்பு : இதில் தகவல் ஒழுங்குமுறை அடங்கும். இம்முறை புலங்கள், பதிவுருக்கள் தொகுதிகள், கோப்புகள் எனப் பல வகைகளைக் கொண்டது.

files, reading and writing - கோப்புகளைப் படித்தலும் எழுதலும் : படி என்னும் சார் பலனைக் கொண்டு ஒரு கோப்பைத் திறக்கலாம். அதே போல எழுது என்னும் சார்பலனைக் கொண்டு அதை எழுதலாம்.