பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய உண்ணுேம், பால் உண்ணுேம் 103

போய்விடுமே என்று துர்க்கை சிவபிரானிடம் முறை யிட்டாள். அந்தப் பெரும் போரை மிகத் தெளிவாகவும் சுவையுடனும் காணும்படி தாம் செய்வதாகப் பெருமான் வாக்களித்தார். நேரே காணும் காட்சிகளைவிடக் காவி யத்தில் காணும் காட்சிகள் தெளிவாகவும் சுவையாகவும் இருக்கும் என்பதை எண்ணியே அப்படிச்சொன்னர். அதன் படியே அவர் கம்பணுகப் பிறந்து இராமாயணத்தைப் பாடிரைாம்.

கேரளத்தில் பல சிவாலயங்களில் இராமாயணத்தைத் தோற்பாவைக் கூத்தாக நடத்துகிருர்கள். அங்கெல்லாம் பின்னணியில் கம்பராமாயணப் பாடல்களேயே பாடு கிருர்கள். இராமாயணத்தை 32 பகுதிகளாக வகுத்துக் கொண்டு இந்தக் கூத்தைக் காட்டுகிருர்கள். -

தென் கேரளத்தில் சில கோயில்களில் கம்பராமாய ணத்துக்காகவும் உபங்கியாசத்துக்காகவும் மானியங்கள் விட்டிருப்பதைக் கல்வெட்டுக்களில்ை அறியலாம்.

பட்டர் பாடிய பகவத்கீதையும் கைவல்ய நவநீதமும் மலேயாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கன்னடத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு பலவேறு வடிவத்தில் உள்ளது. சுந்தரமூர்த்தி நாயனர் வரலாற்றைக் கூறும் நம்பியண்ணன் ரகளே என்பது ஒன்று. சுரங்கமர் என்ற கவிஞர் த்ரிஷஷ்டி புராதன புருஷ சரித்திரம் என்ற பெயரில் நாயன்மார் வரலாற்றைப் பாடியுள்ளார். கிட்டத்தட்ட 13 நூல்கள் அறுபத்துமூவரைப் பற்றிய வரலாறுகளேச் சொல்கின்றன. தனித் தனி நாயனர் வரலாறுகளேச் சொல்லும் நூல்கள் பதினேந்து உள்ளன. சுந்தரர், சிறுத்தொண்டர், சேரமான் பெருமாள், கண்ணப்பர் முதலியவர்களின் வரலாறுகள் தனியே பாடப்பெற்றுள்ளன.

தமிழில் உள்ள பெரிய புராணத்தில் வரும் வரலாறு களுக்கும் கன்னடத்தில் உள்ள வரலாறுகளுக்கும் உள்ள