பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சி விநோதங்கள் T07”

சிறப்புப் பாயிரம் அளித்தார். தத்துவராயர் மத்துவ ராயர் குலத்தில் தோன்றினவர் என்று பாடினர். மாத்து வர்கள் த்வைதிகள்: தத்துவராயரோ அத்வைதி!

என்னுடைய ஆசிரியப்பிரான் இத்தகைய போலி' ஆராய்ச்சிகளைப்பற்றிச் சொல்வதுண்டு. அவர்கள் மணி மேகலையை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த காலத்தில் பெளத்த சமய சம்பந்தமாகப் பல அறிஞர்களைக் கண்டு. அவர்களுக்குத் தெரிந்தவற்றைக் கேட்டு வந்தார்கள். பெளத்த சமய நூல்களில் மிகவும் ஆராய்ச்சியுடைய ஒரு பேராசிரியரை அவர்கள் அணுகினர்கள். அவரோடு பேசிக் கொண்டிருக்கையில் அவர், "தமிழ் நாட்டில் மன்னர் சாமியைக் கிராமங்களில் எல்லாம் பார்க்கிருேம். அந்த மன்னர்சாமி யார் தெரியுமா?’ என்று கேட்டாராம்.

' கிராம தேவதைகளில் ஒன்று ' என்று ஐயரவர்கள் சொன்னர்கள்.

'அல்ல; பலரும் அப்படித்தான் எண்ணி ஏமாந்து போகிருர்கள். சாட்சாத் புத்த பகவானே மன்னர்சாமி' என்று அந்தப் போராசிரியர் சொன்னபோது ஐயரவர்கள் மிக்க ஆவலோடு, 'எப்படி?" என்று கேட்டார்கள்.

"மன்னர்சாமி என்ற பெயரே அந்தச் சாமி புத்த பகவான் என்பதைத் தெரிவிக்கிறதே!' என்று பேராசிரியர் சொன்னர். -

'தயை செய்து விளக்க வேண்டும்.'

'மன் என்ருல் ராஜா. ஆர் என்ருல் தர்மம். தர்மராஜா அல்லது தர்மப் பிரவர்த்தகர் புத்த பகவான். அவர் பெயரையே அப்படிச் சொல்கிருர்கள்' என்று அந்தப். பேராசிரியர் காரணம் கூறியபோது ஐயரவர்கள் தம் சிரிப்பை அடக்கிக்கொண்டார்கள். ஆர் என்பதற்கும் அறம். என்பதற்கும் வேறுபாடு தெரியாமல் அவர் பேசியிருக்கிருர், சிரிக்கத்தானே வேண்டும்?