பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 கண்டறியாதன கண்டேன்

தமிழாராய்ச்சிக் கருத்தரங்கில் சிலர் வாசித்த கட்டுரை களில் கண்ட சில கருத்துக்கள் இத்தகைய விநோதங்களேச் சேர்ந்தவை. முக்கியமாக மூன்ருவது நாள் முற்பகலில் திரு தெ. பொ. மீனட்சிசுந்தரனருக்குப் பிறகு பேசியவர் களில் ஒருவர் வழங்கிய ஆராய்ச்சியுரையில் பல விநோத மான கருத்துக்கள் இருந்தன. மேற்கு ஜெர்மனியைச் சார்ந்த கோட்டிங்கென் (Gottingen) என்ற இடத்தி லிருந்து வந்த ஹீன்ஸ் பெச்சர்ட் (Heinz Bechert) என்பவர் ஒரு கட்டுரை படித்தார். 'தென்னிந்தியாவிலும் இலங் கையிலும் உள்ள ஸ்கந்தகுமார வழிபாடு என்பது பற்றிய ஆராய்ச்சி அது. வட காட்டில் இருந்த சுப்பிரமணிய வழி பாடும் தென்னட்டில் உள்ள முருக வழிபாடும் வேறு வேருக இருந்து, பின்னல் ஒன்றுபட்டுவிட்டன என்றும், இலங்கையில் உள்ள கதிர்காம முருகன் வழிபாட்டுக்கும் பழைய தமிழ் நாட்டு முருகன் வழிபாட்டுக்கும் பல ஒப்பு மைகள் இருக்கின்றன என்றும் அவர் தம் கட்டுரையில் எடுத்துக் காட்டினர். ஒர் ஐரோப்பியர் இந்த அளவுக்கு ஆராய்ச்சி பண்ணிப் பேசுகிருரே என்று பாராட்ட வேண்டியது அவசியம். அதே சமயத்தில், அவர் கூறிய சில கருத்துக்கள் விநோதமாக இருந்ததையும் மறக்க முடியவில்லை.

சுப்பிரமணியன் சிவபெருமானுடைய மைந்தன் என்பது வடகாட்டு ஹிந்து சமயக் கொள்கையாம். தமிழ்நாட்டில் முருகனைப் பழங்காலத்தில் தனிப்பெருங் கடவுளாகக் கொண்டாடினர்களாம். வட காட்டிலிருந்து ஹிந்து சமயக் கொள்கைகள் தெற்கே பரவியதால்தான் சிவபெருமானப் பற்றித் தமிழர்கள் அறிந்தார்களாம். பழங்காலத்தில் முருகனுக்குத் திருவுருவங்கள் தமிழ்நாட்டில் இல்லை. கதிர்காமத்தில் யந்திரத்தில் முருகனை வழிபடுவதுபோல் அடையாளங்களைக் கொண்டே வழிபட்டார்கள்.

திருமுருகாற்றுப்படையைப் பழைய தமிழ் நூல் என்றும், அதில் வரும் முருக வழிபாடே பழையதென்றும்