பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கண்டறியாதன கண்டேன்

ஐயரவர்கள் தாம் பதிப்பித்த இரண்டு நூல்களே அவருக்கு. அனுப்பினர்கள். அவற்றைப் பெற்ற மகிழ்ச்சியைத் தெரிவித்து அவர் ஒரு கடிதம் எழுதினர். 'மகா பண்டி தனே. நீர் நம் கிட்ட அனுப்பிய இரண்டு புத்தகங்கள் வந்து சேர்ந்தன. அவற்றைப் படித்தேன். அவற்றைப் பார்க்கையில் நீர் பெரிய வேலைக்காரராக இருக்க வேண்டு மென்று தோன்றுகிறது' என்று எழுதினர். "பெரிய உழைப்பாளி, பெரிய செயலே ஆற்றியவர்' என்ற எண்ணத். தோடு "பெரிய வேலைக்காரர்' என்று எழுதினர். நாம் யாரேனும் நம்மை ஏமாற்ற முனைந்தால், நீ பெரிய வேலைக் காரன் போலிருக்கிறது!’ என்று சொல்வோம். பழகு தமிழில் பெரிய வேலைக்காரன் என்பதன் குறிப்பே வேறு. அதை அந்தப் பிரெஞ்சுக்காரர் அறியாதவர். அவர் மதிப் புடன்தான் அந்தத் தொடரை எழுதினர்.

புதுச்சேரிக்கு அருகில் வில்லியனூர் என்ற ஊர். இருக்கிறது. அங்கே ஒரு பழைய சிவாலயம் இருக்கிறது. அதற்கு ஒரு புராணம் உண்டு. வில்லைப் புராணம் என்பது அதன் பெயர். அதை ஐயரவர்கள் பதிப்பித்திருக்கிருர்கள். அந்தப் பதிப்புக்கு உதவியாக இருந்த கையெழுத்துப் பிரதிகளுள் ஒன்று ஜூலியன் வின்ஸன் அனுப்பியது. அவர் அந்தப் புராணத்தைத் தம்முடைய கையாலேயே எழுதி அனுப்பினர். மிகவும் பொறுமையுடனும் சிரத்தை யுடனும் எழுதியிருக்க வேண்டுமென்து அந்தப் பிரதியைப் பார்த்தால் தெரியவரும். அதோடு அதில் ஒரு சிறப்பான காரியம் செய்தார். நூலே எழுதுவதற்கு முன் தம் கையாலேயே ஒரு சிவலிங்க உருவத்தைக் காகிதத்தின் தலைப்பில் எழுதியிருந்தார். அவருடைய தமிழன்பை ஐயரவர்கள் அடிக்கடி பாராட்டுவார்கள். வில்லைப் புராணப். பதிப்பில் அவர் செய்த உதவியைப் பற்றி எழுதியிருக் கிருர்கள். -

இந்தச் செய்திகளை எடுத்துக் கூறினேன். பிறகு தொடர்ந்து பேசினேன்: 'அன்று பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த தமிழ்ப் பெரும் பேராசியருக்கும் இங்கே