பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு தமிழ் மாணவர் 129

இருந்த தமிழ் மாணவருக்கும் உறவு உண்டாயிற்று. அந்த உறவே இந்த மாணவர் தமிழ் மன்றத்தின் வித்து என்று நான் கருதுகிறேன். அந்தப் பேராசிரியர் திருவடி நிழலில் இருந்து தமிழ் பயிலும் வாய்ப்பு எளியேனுக்குக்கிடைத்தது. இன்று உலகத் தமிழ் விழா இந்த மாநகரில் கூடுவதற்குக் காரணம் தமிழ் இலக்கியம் பழமையும் பெருமையும் உடையதாக இருப்பதுதான். தமிழின் பழமையையும் சீரிய வரலாற்றையும் தெளியவைக்கும் இலக்கியங்கள் சங்க நூல்கள். அவற்றை உலகுக்கு வழங்கியவர்கள் என்னுடைய ஆசிரியப்பிரான் அவர்கள். அவர்களுடைய இடைவிடாத உழைப்பின் பயகை, மறைந்திருந்த தமிழ்த்தாயின் அணி கலன்கள் வெளியாகி ஒளி வீசுகின்றன. அவற்ருல் தமிழாராய்ச்சி ஆழமும் விரிவும் அடைந்திருக்கிறது. தமிழை உலகமே அறிந்து பாராட்டி ஆராய்ச்சி செய்ய முற்பட்டிருக்கிறது. இந்த உலகத் தமிழ் மாகாடும் மாணவர் தமிழ் மன்றமும் அவர்கள் உழைப்பின் பலவேறு வகை விளைவுகளுள் சில. அவர்களிடம் பண்டைப் பழந்தமிழ் நூல்களேக் கற்று ஆராய்ந்து இன்புறும் பேறு பெற்றிருக் கிறேன். அதோடு "கலைமகள் வாயிலாகப் புதிய தமிழை வளர்க்கும் தொண்டையும் மேற்கொண்டிருக்கிறேன். இந்த மாகாட்டில் பழமையும் புதுமையும் இணைவதைக் காணுகிறேன். மாணவர் தமிழ் மன்றமும் பழமையான நூல்களைப் பயின்று ஆராயும் பணியையும் புதிய தமிழ் நூல்களைப் படைக்கும் பணியையும் மேற்கொள்ள வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மேல்காட்டு நகரங் களில் எல்லாம் இத்தகைய மன்றங்கள் தோன்ற வேண்டும்." - .

இவ்வாறு பேசிய பிறகு ஒரு வாழ்த்துப்பாவைக் கூ வாழ்த்தினேன்:

பல்கலையும் ஓங்குகின்ற பாரிஸ் நகரத்தில் கல்விபயில் மாணவர்கள் காதலுடன்.நல்வழியில் தோற்றஞ்செய் யுந்தமிழ் மன்றம் சுடர்பரப்பி ஏற்றமுடன் வாழ்க இனிது! 9سس لأقيسrtشبهه